உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அஞ்சலெனும் அற்புதம்

அஞ்சலெனும் அற்புதம்

ரஜனி அன்ரன் (B.A) “அஞ்சலெனும் அற்புதம்" 09.10.2025 நூற்றாண்டுகள் கடந்த பந்தம் பற்றோடு வாசல் தேடிவரும் வசந்தம் தகவல் தொடர்பின் அச்சாரம் காலத்தின் இணைப்புப் பாலம் இன்றுவரையும் தொடரும் பயணம் அன்பினைச் சுமந்துவரும் ஆரம் அஞ்சலெனும் அற்புதப் பாலம் ! உலகின் மூலைமுடுக்கெல்லாம் பறந்துசெல்லும் மொழிக்கான விடிவெள்ளிநீ வெள்ளைக் காகிதத்தின் கவிதைநீ எமைக் கொள்ளை கொண்ட காவியம்நீ சொந்தபந்தங்களின் சுகநலங்கள் தூரதேச உறவுகளின் நடப்புக்களை துல்லியமாய் தாங்கிவரும் பெட்டகமே அஞ்சலெனும் அற்புதமே வாழியநீ ! அஞ்சல் தலையும் சரித்திரம் பேசும் அத்துணைச் சிறப்பு உன்தார்ப்பரியம் ஊரறியும் உலகறியும் உன்சேவையின் அர்ப்பணம் அஞ்சலெனும் காவியமே நீவாழி ! https://www.youtube.com/watch?v=e0ZIAaLhgwY