பாமுகம் நேரலை | Live Broadcast

Subscribe
Notify of
guest
1.6K Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
DAVID
DAVID
1 day ago

David Anthony Says:
14/06/2024at 18:30
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,27ம் ஆண்டில் தடம் பதித்து விழா காணும் பாமுகம் தொலைக்காட்சிக்கும்,
19ம்ஆண்டில்நிமிர்ந்து வலம்வரும் புலம் பெயர் தமிழ்சிறுவர் எழுத்தாளர்
மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி,

இறைவன் குரலில்:
——————————
14/06/24: பொதுக்காலம் 10ம் வாரம் வெள்ளிக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
—————————அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கின்றேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.”
என்றார்.
(புனித மத்தேயு:5;31,32)

சிந்தனைக்கு:
————————-
“கற்பு”
—————————
அன்பு சகோதர,
சகோதரிகளே! கற்பு களவுபோவது விபச்சாரத்தில் மட்டுமல்ல.கற்பு பறிபோவது வன்முறை கலாச்சாரத்தில் மட்டுமல்ல. கற்பை இழப்பது பெண் மட்டுமல்ல, ஆணும்தான். கற்பை இழப்பது தொலைக்காட்சிப் பெட்டியும் இணைய தளமும் அல்ல.கற்பு களங்கம் அடைவது குருந்தகடுக்கு அல்ல.”கற்பு”என்பது இறைவனுக்கும் உனக்கும், உனக்கும் உன் அயலானுக்கும் இடையே உள்ள, இறைவனால் அங்கிகரீக்கப்பட்ட உறவு முறை. பார்க்கும் பொருளும் ஆளும் இடமும் பார்க்கின்ற விதமும் கற்பு என்னும் புனிதமான உறவை களங்கப்படுத்திவிடுகின்றன. எதார்த்தமான நிகழ்வும் செயலும் சொல்லும் கற்பு என்னும் இப் புனிதமான உறவில் விரிசல் ஏற்படுத்துவதில்லையா! ஆகவே நல்ல கண்ணேட்டத்துடன் எதையும் பார்ப்போம். நடக்கும் நிகழ்ச்சியை நல்ல மனநிலையில் காண்போம். எதையும் நல்ல கண்ணேட்டத்துடன் அணுகுவோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

Jeyanthi Bala
Jeyanthi Bala
1 day ago

இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன்,

27வது அகவையில் உயர்ந்து நின்று தனித்துவமாக ஒளி வீசும் பா முகத்திற்க்கு இனிய வாழ்த்துக்கள். 
இது பாடல் கேட்க்கும் வானொலி அல்ல இருந்தாலும் இந்த மாத்த்தில் ஒருநாளாவது திரு கவிக்கோ அவர்களும் செல்வி ராகவி மோகனும் பாடியபாடல் ஒன்று முன்பு அடிக்கடி போடுவீர்கள் நல்ல ஒருபாடல். 
வசதி இருப்பின் ஒலிபரப்ப்பினால்
நல்லது நீண்ட நாட்க்கள் கேட்க்க வில்லை
மிகவம் நன்றி

DAVID
DAVID
3 days ago

David Anthony Says:
12/06/2024 at11:40
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,புலம்பெயர் தமிழ் சிறுவர்கள் எழுத்தாளர் மாதத்தில்………
இறைவன் குரலில்:
12/06/24:பொதுக்காலம்
10 வாரம்.புதன்.
இன்றைய நற்செய்தியாக:
————————————
இயேசு கூறியதாவது! “இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.என்றார்.
( புனித மத்தேயு:5:18-19)

சிந்தனைக்கு:
———————————
“.நிறைவேற்றுதல்.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே! திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வரவில்லை, மாறாக அதை நிறைவேற்றவே வந்தேன்’ என்று இயேசு கூறுகிறார். ‘நிறைவேற்றுதல்’ என்பதை முழுமைப்படுத்துதல், முழு அர்த்தத்தைக்கொண்டு வருதல், உண்மையான பொருளை உணரவைத்தல் என்று நாம் பொருள்படுத்தலாம்.

‘புரிந்துகொள்ளுதல்’ என்பது நாம் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அரிய பண்பாகும். இன்றைக்கு உறவுச்சிக்கல்களுக்கு அடிப்படைக்காரணம் ஒருவர் மற்றவரை புரிந்துகொள்ளாமை.

நம்முடைய தவறான எண்ணங்கள், நான் சொல்வது மட்டும்தான் சரி என்கிற மனப்பாங்கு, எதையும் தீர விசாரிக்காமை போன்ற செயல்பாடுகள், நல்லவரையும் பண்பற்றவராக மாற்றிவிடுகிறது. பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் நல்லவர்கள் தான். ஆனால், சரியான புரிதல் இல்லாமை தான் இயேசுவை அவர்களுக்கு விரோதியாகக்காட்டியது. மற்றவர்களை புரிந்து கொள்ளக்கூடிய அருள் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

Peirisnevis
Peirisnevis
3 days ago

புலரும் புதன் நற் பொழுதாக அன்பான பாமுக உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்.
சிறுவர் எழுத்தாளர் ஊக்குவிக்கும் மாதம் வளர்ச்சி காண
தொடரும் நிகழ்ச்சிகள் எழுச்சியாய் நிமிர
சிறியோர் ஆக்கங்களை ஊக்கப் படுத்தி பாராட்டுவோம்.
கலையக நெறியாள்கையின்
அதிபர்நடாமோகன் கலை வாணிக்கும் நன்றி .
மேன்மையுற இறையருள் வேண்டி
அன்புடன்,,,,,,,,,,,

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
4 days ago

புலம்பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம் June.
இந்த நாட்களை உற்சாகப்படுத்த நீங்களும் இணைந்து பங்குபற்ற விரும்பினால் சிறு ஆதரவு இணைக்கரம் வழங்கலாம்..।
🌷🌷🌷
கரமிணைப்போர்:-
🔅யூன் 1 :
நகுல், நீதினி & தவமலர் அவர்கள்..
🔅யூன் 2 :
வேதிகா, விதுஷா, துவாரகீஷ், வாகீசன், ஜதீசன், மற்றும் கவிக்கோ அவர்கள்…
🔅யூன் 3 :
சாம்பவி, சாகித்யா, சங்கவி, கல்யாணி, ராகவி ஆகியோர்.
🔅யூன் 4 :
ராம்ஜித், ரோஜித்
அர்ஜிதா, அபிராமி மற்றும் மஞ்சு மகேஸ் அவர்கள்.

🔅யூன் 5 :
ஆதவன், றவினா, அஜய், சந்தோஷ், கவிப்பிரியன், யஷ்விந், சியாந்,

🔅யூன் 6 :
அருண், அபிஷன், அனுஷன், மற்றும் திவீன், தினா.

🔅யூன் 7 :
பிறெண்டா, ஜெனிபர், சோபியா.

🔅யூன் 8 :
பவித்திரா & விஷ்ணு.

🔅யூன் 9 :
அட்சரன், அச்சுதன், சாரங்கன், மாதுமை, ஜனகன். மதுவந்தி மற்றும் இந்திரா மகாலிங்கம் அவர்கள்..

🔅யூன் 10 :
ஸ்ரீதா சுரேந்தன்,
சஷ்டி தர்ணன்,
ஸ்ரீஸ்டி தர்ணன் மற்றும் அபிராமி, அபிநயா, இராகவி, & டிலஷ்சன் தில்லைத்தேவன்.

இணைக்கரம் இணைத்த யாவர்க்கும் மிக்க நன்றி.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
4 days ago

உற்சாக வணக்கம்
பாமுக நிகழ்வுகள் சிறப்புடன் தொடர்கிறது, காலைச்சிந்தனை நேரம் நீள்கிறது 20 நிமிடத்தில் நிகழ்ந்து நிறையின் சிறப்பே.
தொகுப்புக்கள், தொடர்நிகழ்வுகள்
சிறு சிறு வலுப்படுத்தலுடன் பிரகாசிப்பின் பாமுகப் பிரகாசமும்
உலகத்திசையெங்கும் உலாவர
ஒத்துழைப்பாகலாம். என்பது என் தாழ்மையான கருத்தே.
நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
4 days ago

உற்சாக வணக்கம்

இணைக்கரம் இணைத்த யாவர்க்கும் மிக்க நன்றி.

இத்திங்களின் சிறப்பில் தற்போது பாமுகத்தில் இணையும் இளையோர் பங்காற்றல் குறைந்திருந்தது. தொகுப்பாளர்கள், நேயர்கள் வலுப்படுத்தும் வாழ்த்துக்களும்
தென்படவில்லை. என்றும் எமக்கு ஏற்றம் தரும் பாமுகப்பணியின் சேவைக்கு சமர்ப்பணமாக யூன் மாதம் அமையுமாயின். மிகமிக நன்று
கரமிணைத்து வலுப்படுத்துவோம்
தொடராக வழிகாட்டுவோம்
மிக்க நன்றி
யூன் மாதம் வரை தொடரலாம் பொன்சர் இணைவுகள்…

அனைவருக்கும் நன்றி

Sarwaswary. K
Sarwaswary. K
4 days ago

படைப்பாளியாக இன்று பாமுகத்தினூடாக வெளிப்பாடாகும் யாவருக்கும்
வாழ்த்துக்கள்..

Sarwaswary. K
Sarwaswary. K
4 days ago

எல்லோருக்கும் உற்சாகமான வணக்கம்….எல்லாமான சந்தோஷ நாளாகட்டும்…

Kandasamy Segar
Kandasamy Segar
4 days ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மன்னிப்புடன் இன்று
வாழ்வின் உண்மை நிகழ்ச்சி  சுகயீனம் காரணமாக  தவிர்கப்பட்டு மீண்டும் அடுத்த வாரம் தொடரும்.

இன்றைய நாளில் படைப்புக்களை படைக்கும் அனைவருக்கும் மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்

சிவதர்சனி
சிவதர்சனி
5 days ago

பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 529..!

1.ஏழெழுத்துச் சொல் ஒன்று.. இயற்கையில் இணைந்தது / இரசிக்க அழகினைத் தருவது..
2.முதல் மற்றும் கடைசி இரண்டும் சேர உறுப்பு ஒன்று..
3.மூன்று மற்றும் கடைசி இரண்டும் சேர சுவைகளில் ஒன்று..
4.ஒன்று நான்கு ஐந்து ஏழு சேர கொடி பறக்க தேவை?
5.ஒன்று இரண்டு கடைசி சேர மதிப்புக் கொடுத்தம் எனவும் பொருள் தரும்?
6. முதல் மூன்று எழுத்துக்கள் சேர ஒரு நடிகை…

Ragini. Alphonse
Ragini. Alphonse
Reply to  சிவதர்சனி
4 days ago

1.கனகாம்பரம்
2.கரம்
3.காரம்
4.கம்பம்
5.கனம்
6.கனகா

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
5 days ago

இன்றைய தினத்தில் பாமுகம் தொலைலக் காட்சி நிறுவனத்தினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் .
27 வது ஆண்டினை பூர்த்தி செய்கின்ற இத்தருணத்தில் நாம் பெருமைப்படவேண்டிய ஒரு நிகழ்வாக பார்க்க முடிகின்றது . பாராட்டுகள் .

எமது புலம்பெயர்ந்துவாழும் இளம் சிறார்களை ஊக்கிவித்து தமிழையும் ,
நம் பராம்பரிய கலாச்சார விழுமியங்களை தொடர்ந்து பணியாற்றி வரும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இவ்வேளையில் வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றேன் .
நன்றி .

றாதிகா ஆறுமுகம் பிள்ளை
Holland

Last edited 5 days ago by ராதிகா ஐங்கரன்
DAVID
DAVID
5 days ago

அகவை இருபத்தியேழில் தடம் பதிக்கும் பாமுகத்திற்கு இனிய இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
டேவிட்.(பிரான்ஸ்சிலிருந்து)

Peirisnevis
Peirisnevis
5 days ago

அகவை 27ல் தடம் பதிக்கும் பாமுகத்துக்குஇனிய பிறந்த
நாள் வாழ்த்துக்கள்.
உறவாய் நட்பாய் இருக்கின்றாய்
நீ வாழ வேண்டும் பல்லாண்டு.
உன்னோடு நாம்இணைய,,,,,

DAVID
DAVID
5 days ago

David Anthony Says:
10/06/2024 at11:45
Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,புலம்பெயர் தமிழ் சிறுவர்கள் எழுத்தாளர் மாதத்தில்………
இறைவன் குரலில்:
10/06/24:பொதுக்காலம்10 வாரம்.திங்கள்.
இன்றைய நற்செய்தியாக:
————————————
இயேசு கூறியதாவது! « உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். »என்றார்.
( புனித மத்தேயு:5:12)

சிந்தனைக்கு:
———————————
“மலைப்பொழிவு.”
———————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இயேசுவின் “மலைப்பொழிவு”
இன்றைய நற்செய்தியாக நமக்குத்தரப்படுகிறது.
இயேசு திருவாய் அமர்ந்து போதிப்பதாகவும் நற்செய்தியாளர் சொல்கிறார். அதாவது இதயப்பூர்வமாக இயேசு போதிக்கிறார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உணர்வின் உறைவிடத்திலிருந்து இயேசுவின் வார்த்தைகள் வருகிறது. அவருடைய போதனையின் மைய அறிக்கைகள் தான் இந்த மலைப்பொழிவு.

நமது சிந்தனைகளும், எண்ணங்களும் அடிப்படையில் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது செயல்பாடுகள் நல்லவகையாக இருக்கும். தெளிந்து சிந்தனையைத்தருகிறவர் கடவுள். சிந்தனையில் தெளிவு இருக்கும்போது, நம்மால் துணிவோடு பேச முடியும், எதைக்கண்டும் பயப்படாமல் மதிப்பீடுகளுக்கா நிற்க முடியும்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்

Kalyani Kamalanathan
Kalyani Kamalanathan
5 days ago

மோகன் மாமா வாணி aunty யின் வடாமுயற்சிக்கும், தொடர்பணிக்கும் நன்றகள்..

Kalyani Kamalanathan
Kalyani Kamalanathan
5 days ago

எல்லோருக்கும் காலை வணக்கம்…..
அகவை இருபத்தியேழில் காலடி பதிக்கும் பாமுகத்திற்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
5 days ago

எமது பாமுகத்திற்கு இனிய இனிந 27 ஆவது பிறந்தநாள் வாழ்ததுக்கள்்்்அண்ணா வாணியக்கா றாகவியின் அற்பணிப்பால் பலர் பலவிதமாக முன்ஏறியிருக்கிறார்கள் இவர்கள் மூவருக்கும் எமது மனமார்ந்த நன்றி ்் மீண்டும் இனிய இனிய 27rh பிறந்தநாள் வாழ்ததுக்கள்🎂🎂🎉🎉

Rajani Anton
Rajani Anton
5 days ago

எல்லோருக்கும் காலை வணக்கம்…..
அகவை இருபத்தியேழில் காலடி பதிக்கும் பாமுகத்திற்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு வளமோடு வாழியவே…..தொடர்பணியோடு பயணிக்கும் அதிபருக்கும் வாணி மோகனுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
5 days ago

உற்சாக வணக்கம்
ஆனி 10 ல்
தேனீ போல் என்றும் திரட்டிச் சுவை தரும் பாமுகமே
உலகையாளும் மிடுக்குடன்
உருவாகி வளர்ந்து 27 ஆண்டு
உருவாக்கி உயர்வதே பாமுகத் திறன்
அணிசேர் அத்தியாயங்கள் அளப்பெரும் சான்றுகள்
மேடை நிகழ்வின் வெளிப்பாடுகள்
நேயர் குழாமே தொகுப்பாளராய்
இளையோர் வளர்ச்சி குறிக்கோளாய்
எழுத்தே மொழியின் இலக்கொன்றி
எண்ணற்ற நிகழ்வுகள் மிகையாகி
ஏற்றம் பாமுகச் சரிதமென
போற்றும் வாழ்வே நிலையொன்றி
வாழிய வாழிய பல்லாண்டு
அகவை 27ன் பொன்னாளாய்
வாழிய வாழிய பாமுகமே
வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி. வானுயர் வெற்றி பெற்றுயர்கவே!

பாமுகக்கலைக்குடும்ப உறவுகள் அனைவருக்கும் இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
5 days ago

இந்த எழுத்தாளர் மாதத்தின் பங்களிப்பு செய்த யாவர்க்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.நன்றி

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
5 days ago

காலை வணக்கம்

இன்று திங்கட்கிழமை தொடரும் நிகழ்வுகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
இன்றைய நாள் இனைத்து பங்கு பற்றி சிறப்பிக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்கள் வாணி நடாமோகனுக்கும் வாழ்த்துக்கள்.

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
5 days ago

காலை வணக்கம் வாணி நடாமோகனுக்கும் வாழ்த்துக்கள்.

27. வருடங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் “fatv Tamil வாழ்க வாழ்க உன் புகழ். “. சாதி மதம் கடந்து பல நாடுகள் இணைந்து
பல மொழிகள் பேசும். இளம் சிறார்கள் கூடி கதை பேசினாலும் “தமிழ் மொழி வளர ” பேச எழுத ஊக்குவிக்கும் கானொலியாய் பரந்து விரிந்து வளர்கிறாய் சிறப்பு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் .

இளையவர் தொடக்கம் பெரியவர் வரை கூடி மகிழும் கானெலியாய் நேர் முகமாய் வந்து இனைந்து சிறப்பிக்க இடமும் களமும் தந்தாய் வாழ்க வாழ்க உன் பணி.

எல்லோருடைய திறமையையும் வெளியே எடுத்து காட்ட களம் தந்து வளமளிக்கும் நடாமோகனுக்கும்
வாணிக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள், இனைத்து பங்கு பற்றும் எல்லோருக்குமே சிறப்பு வாழ்த்துக்கள்.

“வாழ்க உன் புகழ்
வாழ்க உன் தமிழ்
வாழ்க உன் பணி
வாழிய வாழிய வாழியவே”

வந்து

Peirisnevis
Peirisnevis
5 days ago

புலர்ந்த திங்களின் விடியல், இனிய பொழுதுகளாக
பாமுக உறவுகள் அனைவருக்கும் அன்புடன் காலை வணக்கம்.
தொடரும் நிகழ்ச்சிகள் எழுச்சியுற ,நிறைந்த வாழ்த்துக்கள்
படைப்போர் ,தொகுப்போர்,அனைவருக்கும் பாராட்டுக்கள்..
நெறிப்படுத்தும் திரு திருமதி நடாமோகன் ,கலைவாணிக்கும்
நன்றிகள் ,மென்மேலும் வளர்ந்திட, இறை ஆசீர் கூடி வர
அன்புடன்,,,,,,,,,,

Jeyanthi Bala
Jeyanthi Bala
6 days ago

வணக்கம் திருமதி வாணி மோகன் சுகயீனம் காரணமாக நீண்ட நாட்களாக எழுதவில்லை மன்னிக்கவும்.
Email மூலம் ஆன்மீகபால நிகழ்ச்சிக்கு வினா ஐயாவிடம் கேட்டு எழுதியிருந்தேன். 2 கிழமையும் வாசிக்கப்படவில்லை
அது வேற email folder இல் மாறி விட்டதோ தெரியவில்லை. இன்றும் கேள்வி அனுப்பியுள்ளேன் தயவு செய்து பார்க்கவும் மிகவும் நன்றி

Last edited 6 days ago by Jeyanthi Bala
DAVID
DAVID
6 days ago

David Anthony Says:
09/06/2024 at 20:15
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,புலம்பெயர் தமிழ் சிறுவர்கள் எழுத்தாளர் மாதத்தில்………
இறைவன் குரலில்:
09/06/24:பொதுக்காலம்10 வாரம்.ஞாயிறு.
இன்றைய நற்செய்தியாக:
————————————
இயேசு கூறியதாவது!
“இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ” என்றார்.
( புனித மாற்கு:3:35)

சிந்தனைக்கு:
———————————
“அவதூறு.”
———————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இயேசு தம் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பாராட்டும் புகழ்ச்சியும் வணக்கமும் பெற்றாரோ, அந்த அளவுக்கு இகழ்ச்சியும், புரிந்துணர்வின்மையும், அவதூறும் பெற்றுக்கொண்டார் என்பது உண்மை.

இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படாத அனைவரும், பைத்தியக்காரன் என்ற முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆனாலும், அதையெல்லாம் தாண்டி, வாழ்வது தான் சவாலானது. உண்மையானது. அப்படிப்பட்ட வாழ்வை நாம் அனைவரும் இணைந்து வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

Sarwaswary. K
Sarwaswary. K
6 days ago

நீதினி மகளின் அற்புதமான பகிர்வாக இருக்கிறது…வோட்டை போடுவது யாருக்கு….அதனால் ஏற்படும்
நன்மை …தீமை ……அற்புதமான பகிர்வு…சிறப்பு…சந்தோஷம்…வாழ்த்துக்கள்…இளையவர் உலகம் தெளிவை நீக்கியே நகர்கிறது….வாழ்த்துக்கள் நீதினி…

Sarwaswary. K
Sarwaswary. K
6 days ago

உற்சாகமான காலை வணக்கம்….எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..

சிவாஜினி சிறிதரன்
சிவாஜினி சிறிதரன்
7 days ago

கோசல்யா அவர்களின்
நினைவாக நடத்தப்படும்
கவி சிறப்பு வாழ்த்துக்கள்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
8 days ago

உற்சாக வணக்கம்
காலைப் பொழுதின் விடியல் பொன்மாலைப் பொழுதரங்கு நிறைமதியாய் திகழ
பாமுகத்தில் தொடர் நிகழ்வுகள்
அணிகலனாய் மிளிர இன்று வலுப்படுத்தலுடன் இணைவோருக்கும் ஒவ்வொரு நிகழ்வாளர்களுக்கும் வாணி, மோகன் அண்ணா தொடர் பணிக்கும் மாலைத்தென்றல் நிகழ்வின் சிறப்புகளுக்கும் மிகுந்த மிகுந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நன்றி

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
8 days ago

தாயக பொன்மாலை பொழுது மிகச்சிறப்பு ஆனால் சத்தம் வடிவாக கேட்கவில்லை செல்வியக்கா மன்னிப்போடு எமக்கு நேரலையில் பார்கக சந்தர்ப்பம் தந்த எமது பாமுகத்திற்கும் அண்ணா வாணியக்காவுக்கும் மிக்க நன்றி அத்தோடு செல்வியக்காவுக்கும் மிக்க நன்றி

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
8 days ago

காலை ங
தாயக பொன் மாலைப் பொழுது சிறப்பான முறையில் நடைபெறுகிறது செல்வி ஜெயா அக்கா மற்றும் பங்கு பற்றி சிறப்பிக்கும் குழந்தைகளுக்கும்
இனைந்து நடத்தும் எல்லோருக்கும் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள். நேரடியாக வீடியோ பார்க்க செய்த நடாமோகனுக்கும் வாழ்த்துக்கள்.

சிவாஜினி சிறிதரன்
சிவாஜினி சிறிதரன்
8 days ago

மிகப் பெருமை மிக்க விழா
வாழ்த்துக்கள் செல்வி அக்கா

Thargini Shan
Thargini Shan
9 days ago

உற்சாக வணக்கம்

Nevispeiris
Nevispeiris
9 days ago

பாமுக உறவுகளுக்குஅன்பான காலை வணக்கம் உற்சாக எழுச்சியடன் வரும் நிகழச்சித் தொடர்களுக்கு வாழ்த்துக்கள்்புலம் பெயர் சிறுவர்
எழுத்தாளர் ஊக்குவிப்பு மாதம் கரம்
இணைப்போருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளர்க
இறை ஆசீர் கூடிவர

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
9 days ago

காலை வணக்கம் வாணி.

சிறப்பாக நிகழ்வுகள் நடைபெறுகின்றன சிறப்பு வாழ்த்துக்கள்

DAVID
DAVID
10 days ago

David Anthony Says:
05/06/2024 at 14:20
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,புலம்பெயர் தமிழ் சிறுவர்கள் எழுத்தாளர் மாதத்தில்………
இறைவன் குரலில்:
05/06/24:பொதுக்காலம்
9ம்வாரம்.
புதன்கிழமை.
இன்றைய நற்செய்தியாக:
————————————
இயேசு அவர்களை நோக்கி,
ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.
என்றார்.
( புனித மாற்கு:12:26-27)

சிந்தனைக்கு:
———————————
“இறை வார்த்தை.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே! உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாத சதுசேயருக்கு இயேசு பதிலளிக்கின்றார். இறையியல் தவறுகள் ஏற்படக் காரணங்கள் மறைநூல் அறிவு இல்லாமையும், இறையாற்றல் அனுபவம் இல்லாமையும் என்கிறார் இயேசு. திருச்சபையின் வரலாற்றில் எத்தனையோ இறையியல் பேதகங்கள் தோன்றியிருக்கின்றன. அவற்றையெல்லாம் திருச்சபை மேற்கொண்டு, உண்மையைப் பற்றிக்கொண்டு பயணம் செய்கின்றது. இறைவார்த்தையும், இறை அனுபவமும் நம்மை இறையியல் மற்றும் வாழ்வியல் பிழைகளினின்று காக்கின்றன. எனவே, இறைவார்த்தையை ஆர்வத்துடன் பற்றிக்கொள்வோம். அத்துடன், “இறைவனால் எல்லாம் கூடும்” என்பதையும் மனதார ஏற்று நம்பிக்கை கொள்வோம். அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்படும்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
10 days ago

இனிய காலை வணக்கம்,
வியாழக்கிழமை தோறும் பாமுத்தில் படர்ந்து வருகின்ற முற்றத்துமலர்கள் நிகழ்ச்சியில் இம்முறை 06.05.2024 கவிஞர் திரு. சிவகுமார் கந்தையா ( மாவை சிவம் ) யேர்மனி அவர்கள் விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
10 days ago

உற்சாக வணக்கம்
புலம்பெயர் உலகத்தமிழ்ச்சிறுவர் தினங்களில்.
ஆக்கப்படைபுக்கள் தொகுப்புக்கள் தரும் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ஆதரவுக் கரமிணைக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி
10.6.24
27வது அகவையின் உயர்வில்
மகிழும் நாட்களின் பிரகாசத்தில்
வற்றாத சுரங்கத்தின் படைப்புக்களும் தொகுப்புக்களும்
தொகுப்பாளர் வளர்ச்சிகளும். நிலைபெற்றுயரும் காற்றலை மிடுக்கில் வடம்பிடித்துயர்க! இணைவோம்.
“வலுவும் வளர்ச்சியும்
மொழியின் வேரே விடாது பயிற்சி தரும் பாமுகப்பணியே”
நன்றி

தொடர்பணியாளர்கள் அனைவர்க்கும்,இளையோர் தொகுப்பாளர்களுக்கும் நனிமிகு பாராட்டுக்கள்.

DAVID
DAVID
11 days ago

David Anthony Says:
04/06/2024 at 13:42
Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,புலம்பெயர் தமிழ் சிறுவர்கள் எழுத்தாளர் மாதத்தில்………
இறைவன் குரலில்:
04/06/24:பொதுக்காலம்
9ம்வாரம்.
செவ்வாய்கிழமை.
இன்றைய நற்செய்தியாக:
————————————
இயேசு அவர்களை நோக்கி,
“சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”
என்றார்.
( புனித மாற்கு:12:17)

சிந்தனைக்கு:
———————————
“வரி விதிப்பு.”
———————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
அரசரை விட இறைவனுக்கு மனிதர்கள் மீது அதிக உரிமைகள் இருப்பதை இயேசு சுட்டிகாட்டுகிறார். அதே நேரத்தில் இயேசு “வரி விதிப்பு”க்கு சாதகமான பதில்களையும் சொல்ல வில்லை. யூத மக்களின் அன்றாட வாழ்வை அதிகமாக பாதித்தது அன்றைய உரோமை அரசு மக்கள் மீது திணித்த வரிகள். தாங்கள் உரோமை அரசின் குடிமக்கள் என்பதைக் காட்டவே அவர்கள் வரிகள் செலுத்த வேண்டியிருந்தது. இயேசு ஒரு நாணயத்தை தன்னிடம் கொண்டுவருமாறு அங்கிருந்தவர்களைப்பணிக்கிறார். இதிலிருந்து, இயேசுவிடம் ஒரு நாணயம் கூட இல்லை என்பது தெளிவாகிறது. இயேசு பணத்தின் மீது பற்றற்றவராக இருந்தார். கடவுளின் மகனாக இருந்தபோதிலும், தனது பணிதான், அவருடைய பெரும் செல்வமாக இருந்தது. நாமும், இயேசுவைப்போல பற்றற்றவர்களாக வாழ்வோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

சிவதர்சனி
சிவதர்சனி
11 days ago

பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 527!!

1.வாழ்வின் சீரோட்டத்துக்கு முக்கியமானது..
ஆறெழுத்துச் சொல்லு?
2.முதல் மற்றும் இறுதி இரண்டும் சேர மக்கள் கூட ஏற்ற இடம்?
3.முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டும் சேர செயற்பாடு ஒன்று?
முதல் மற்றும் இறுதி சேர ஒரு திரைப்படத்தின் பெயர்?

Kandasamy Segar
Kandasamy Segar
11 days ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மன்னிப்புடன் இன்று வாழ்வின் உண்மை நிகழ்ச்சி  சுகயீனம் காரணமாக  தவிர்கப்பட்டு மீண்டும் அடுத்த வாரம் தொடரும்.

இன்றைய நாளில் படைப்புக்களை படைக்கும் அனைவருக்கும் மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்

DAVID
DAVID
12 days ago

David Anthony Says:
03/06/2024 at 13:55
Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,புலம்பெயர் தமிழ் சிறுவர்கள் எழுத்தாளர் மாதத்தில்………
இறைவன் குரலில்:
03/06/24:பொதுக்காலம்
9 ம்வாரம்.திங்கட்கிழமை.

இன்றைய நற்செய்தியாக:
————————————
“கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று’ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?” என்று அவர் கேட்டார்.
( புனித மாற்கு:12:1-12)

சிந்தனைக்கு:
———————————
“புது வாழ்வு.”
———————————
அன்பு உறவுகளே! ஆண்டவர் உன்வாழ்வில் உனக்குக் குறை எதுவும் வைக்கவில்லையே. உனக்குப் போதுமானவை எவை என்பதை தெளிவாகத் தெரிந்து, போதுமானதைப் போதுமான அளவு தந்துள்ளார். செழிப்பான திராட்சைத் தோட்டம், சுற்று வேலி, காவல் மாடம், பிழிவு தொழிற்சாலை, போதுமான வருமானம் இப்படி உன் தெய்வம் உனக்குத் தந்துள்ள வாழ்க்கை வசதிகளை வரிசைப்படுத்திப் பார்.

கடவுள் கொடுத்ததில் நிறைவு அடைந்து, கடவுளுக்கு உரிமையுடையதை கடவுளுக்கும், கடவுள் பணிக்கும் கொடுத்து மேலும் நிறைவடைவோம். அதுவே அருளுடையோர் செயல். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு “புதுவாழ்வு”வாழ வாழ்த்துகிறேன்.
தொடரும்………….
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

DAVID
DAVID
13 days ago

David Anthony Says:
02/06/2024 at 11:00
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,புலம்பெயர் தமிழ் சிறுவர்கள் எழுத்தாளர் மாதத்தில்………
இறைவன் குரலில்:
02/06/24:பொதுக்காலம்,
9ம் வாரம்,ஞாயிறு.
*கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தம் பெரு விழா.
இன்றைய நற்செய்தியாக:
—————————————
“இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம்,”இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும்”என்றார்.( புனித மாற்கு:14:22-24)

சிந்தனைக்கு:
———————————
“உடலும் இரத்தமும்———————————
அன்பு உறவுகளே!
உங்கள் அனைவருக்கும் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா நல்வாழ்த்துக்களை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திருவிழாவிலே நல்ல உடல் ஆரோக்கியமும், குறைவில்லா வருமானமும், தீராத சந்தோசமும், சிறந்த நற்பண்புகளையும் நீங்கள் பெற்றிட உங்களை வாழ்த்துகிறேன்.

உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறு. மனம், ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக்கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். நற்கருணை என்பது ஒரு இயேசு நமக்காக எந்நாளும் இருக்கின்றார் என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூருகின்ற நிகழ்ச்சியாகும். அதே நேரத்தில் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நாம் கடவுளின் குடும்பமாக இணைகின்றோம். வழிபாட்டை பொறுத்தவரையில் தகுந்த தயாரிப்போடு செய்யக்கூடிய வழிபாடுதான், நிறைவான கடவுள் ஆசீரைப்பெற்றுத்தரும். தயாரிப்பில்லாத வழிபாடு வெறும், சடங்கு சம்பிரதாயமாகத்தான் இருக்கும். ஆண்டவரின் காரியங்களைச் செய்யும்போது, நல்ல தயாரிப்போடு வாழக்கூடிய மனதுடன் செய்வோம்.
ஆகவே,
ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது திருவுடல், திருஇரத்தம் என்னும் கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம். எங்களை ஆசிர்வதித்தருளும்.
தொடரும்………….
இறை ஊழியன்
டேவிட்.( பிரான்ஸ்)

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
13 days ago

யூன் 2. வேதிகா, விதுஷா,துவாரகீஷ், வாகீசன், ஜதீசன், கவிக்கோ அவர்கள்…
யூன் 3. சாம்பவி, சாகீர்த்யா, சங்கவி, கல்யாணி, ராகவி அவர்கள் …
யூன் 4. …மஞ்சு மகேஸ் அவர்கள்
யூன். 5…..
யூன் 6 .அருண், அபிஷன், அனுஷன் ….
யூன் 7..
யூன் 8…..
யூன் 9… அட்சரன், அச்சுதன், சாரங்கன், மாதுமை,ஜனகன். மதுவந்தி அவர்கள்
யூன் 10…..
தொடரும்….
நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
13 days ago

உற்சாக வணக்கம்
19 ம் ஆண்டில் புலம்பெயர் உலகத்தமிழ்ச் சிறுவர் எழுத்தாளர்
திங்களின். சிறப்புகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.
இளையோர் இணைவில் ஆக்கப் படைப்புகளும், மகுடமிடும் தொடர்ச்சி நிகழ்வுகளும், எழுத்தே மொழியின் உயிர்ப்பென, புத்தம்புது படைப்புக்கள் தினம்தினம் உருவாக்க உணர்ச்சிகள் வனப்புடன் தொடரும் அனைத்து தொகுப்பாளர்கள் படைப்பாளர்கள்
நனிமிகு பணிக்கும், சீரான செதுக்கலில் இன்றைய நிகழ்வின்
தொடர்ச்சிக்கும், பாமுக காற்றலை பணியின் வளர்ச்சிக்கும் மிகுந்த மிகுந்த பாராட்டுக்கள்.
27ம் ஆண்டின் சரிதத்தில் பாமுகம்
19ம் ஆண்டின் தொடர்ச்சி வடம்பற்றி பல்துறைப்பணிகள்
விடாமுயற்சியே வெற்றி மிடுக்கு வாழ்த்துக்கள் நன்றி

DAVID
DAVID
15 days ago

David Anthony Says:

31/05/2024 at 12:57.
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
உழைப்பின் மகத்துவம் ஊக்குவிக்கும் சிறப்பு மாதத்தில்,

இறைவன் குரலில்:
——————————
31/05/24: பொது காலம் 8ம் வாரம் வெள்ளிக்கிழமை.
நற்செய்தி வாசகம்:
———————————
அப்போது மரியாள் உரைத்ததாவது:
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றதுஎன் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.”என்றார்.
(புனித லூக்கா:1;46,48)

சிந்தனைக்கு:
————————-
“விடுதலை கீதம்.”
—————————
அன்புள்ள சகோதர, சகோதரிகளே! விடுதலை தேடி ஏங்குகின்ற இலட்சக்கணக்கான இலங்கை தமிழ் மக்களின் வாழ்வில் இன்னும் கோலோச்சுகின்ற அடிமைத்தனங்கள் மறைந்து விடுதலை அனுபவம் விடிந்திட நாங்கள் உழைத்திட வேண்டும்.
சுதந்திரம் அரசியலின்அங்கம் அல்ல. ஆன்மீகத்தின் அடித்தளம்.எங்குஆன்மீக அடித்தளம் அகலமாக ஆழமாகஅமைந்திருக்கின்றதோ அங்கு சுதந்திரக் காற்று பூங்காவனத்துத் தென்றலாக புதுமணம் பரப்பும். ஆன்மீகமே இல்லாதவர்கள் எல்லாம் சுதந்திரத்தை அரசியல் அங்கமாக்கிப் பார்ப்பதால், சுதந்திரம் குரங்கு கை பூமாலையாக சிக்கி சிதைந்து
கசங்கியுள்ளது.

ஆன்மீகத்தின் அடித்தளமும் அமைத்து மகுடமும் சூடிய, மண்ணுக்கும் விண்ணுக்கும் அரசியாம் அன்னை மரியாள் மட்டுமே இவ்விடுதலைக்கீதத்தை இசைக்க முடியும். எல்லாச் சமூகத் தீமைகளையும் வென்று, வெற்றிக் களிப்பில் பாடும் பாடல் இது.நாமும் அன்னை மரியாளோடு இணைந்து பாடுவோம்.

ஆன்மீக விடுதலை, அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, உணர்த்தும் விடுதலைக் கீதம். சமத்துவம் சகோதரத்துவம் எங்கும் சங்கமிக்கும் சந்தம் நிறைந்த பாடல்இது. நொந்தோர்,
நொடிந்தோர், நோயுற்றோர்,நைந்தோர், நலிவுற்றோரின் உறிமைக்குரலின் கீதமாகும்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,

இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

Selvi Nithianandan
Selvi Nithianandan
16 days ago

கேள்விக் கணைகள் (556) புள்ளிகள் (30.05.2024)

ஜெயா நடேசன் 253 +6+2+ 26 !
பத்மினி கமலகாந்தன் 233 +5+4 +2=244
நகுலவதி தில்லைத்தேவன் 211 +6+2=219
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன் 162
வாணி நடாமோகன்234 +5+3 = 242 சறோஜினி சோதிராஜா 245 +5+2 =252
நேவிஸ் பிலிப்ஸ் 177+7+5 +2 =191
ஜெசி மணிவண்ணன் 244+
ராஜினி அல்போன்ஸ்- 238 +6+3 +2=249 லோஜினி முகுந்தன் 228 +7+5 =240
ராதிகா ஜங்கரன் 115
இரட்னேஸ்வரி மனோகரன் 05
சாந்தினி துரையரங்கன் 05
வஜிதா முகமட்33
நகுலா சிவநாதன் 46
ஜெயமலர் ஜெயம்113
தர்ஜினி சன்முகநாதன் 60 +7+3 =70
பத்மலோஜினி திரு 14
ஜெனி 05
நகுல் 15
அபிராமி 34
ஆதவன் 10
நடாமோகன் 06
உமா காண்டீபன் 05

DAVID
DAVID
16 days ago

David Anthony Says:
30/05/2024 At 13:00
Thursday.

அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!

இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
உழைப்பின் மகத்துவம்
ஊக்குவிக்கும் சிறப்பு
மாதத்தில்,
வாழ்த்துக்கள்கூறி,
இறைவன் குரலில்:
——————————
30/05/24: பொதுக்காலம்
8ம் வாரம் வியாழக்கிழமை.

நற்செய்தி வாசகம்:
——————————
பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்றார். இயேசு அவரிடம், நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
(புனித மாற்கு:10:52)

சிந்தனைக்கு:
—————————
“ மன நிலை.”
—————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
”இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரங்கும்” என்கிற, பார்வையற்ற மனிதரின் வார்த்தைகள் நமது சிந்தனையைத்தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

பார்வையற்ற மனிதன் தனது நிலையை முழுவதும் உணர்ந்தவனாக இருக்கிறான். தான் பாவி என்பதை ஏற்றுக்கொள்கிறான். ஆக, ”என் மீது இரங்கும்” என்கிற வார்த்தை, அவன் பாவங்களை அறிக்கையிடுவதாக அமைகிறது. அதுதான் கடவுளின் அருளுக்கு வாய்க்காலாகவும் அமைகிறது. நமது வாழ்வில் நாம் ஆண்டவரைத் தேடுகிறோம். சரியான மனநிலையோடு தேடுகிறோமா? நமது தேடல் சரியானதா?கடவுளின் அருளைப்பெறுவதற்கு முன்னதாக, அவரது இரக்கத்தை, நம்பிக்கையைப் பெறுவதற்கு, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

DAVID
DAVID
17 days ago

David Anthony Says:
29/05/2024 At 19:10
Wednesday.

அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!

இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,
உழைப்பின் மகத்துவம்
ஊக்குவிக்கும் சிறப்பு
மாதத்தில்,
வாழ்த்துக்கள்கூறி,
இறைவன் குரலில்:
——————————
29/05/24: பொதுக்காலம்
8ம் வாரம் புதன்கிழமை.

நற்செய்தி வாசகம்:
——————————
 ஏனெனில்,மானிட மகன்
தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
(புனித மாற்கு:10:45)

சிந்தனைக்கு:
—————————
“தீமை.”
—————————
அன்பு
சகோதர,சகோதரிகளே! வாய்சொல் வீரர் நிறைய உண்டு. வாய்ப் பந்தல் போடுவோருக்கு இன்று குறையே இல்லை. கடினமான பாதையை கைகாட்டிவிட்டு நடையைக் கட்டுகிறவர்கள் உண்டு.

நமது வாழ்வில் உண்மைக்கு துணைநிற்பதற்கு நாம் ஒதுங்கியிருக்க தேவையில்லை. நம்மால் இந்த “தீமையை”எப்படி எதிர்க்க முடியும் என்று ஓடி ஒளிய தேவையில்லை. இறைவன் நம்மை இயக்குவார். இறைவன் நம்மை வழிநடத்துவார். அந்த நம்பிக்கை சீடர்களுக்கு இருந்தது. அதே நம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்வோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)