பாமுகம் நேரலை | Live Broadcast

Subscribe
Notify of
guest
2K Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Selvi Nithianandan
Selvi Nithianandan
1 day ago

புள்ளிகள் 588 (19.12 ..2024)
ஜெயா நடேசன் 171
ஜெசி மணிவண்ணன் 139
ராஜினி அல்போன்ஸ் 168
ஐெயமலர் ஐெயம் 209
வாணி மோகன் 204
நேவிஸ் பிலிப்ஸ் 133
சறோஜினி சோதிராஜா 145
நகுலவதி தில்லைத்தேவன் 146
தர்ஜ்னி சண்முகநாதன் 72
பத்மினி கமலகாந்தன்151
சிவமணி 50
வஜிதாமுகமட் 05
சிவதர்சினி 22
தமிழன்பன் 05 சாந்தினி 05
லோஜினி முகுந்தன் 60

DAVID
DAVID
1 day ago

David Anthony Says:12:32
19/12/2024
Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “மனிதநேயம் உணர்த்தும்”மகத்தான மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
திருவருகை காலம்
3ம் வாரம் வியாழன்.
19/12/2024.
நற்செய்தி வாசகம்:
——————————
“வானதூதர் அவரை நோக்கி,செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்.”என்றார்
(புனித லூக்கா:1:13,14)

சிந்தனைக்கு:
——————————
“அன்பு.”
——————————
சகோதர,சகோதரிகட்கு! உண்மையான அன்புக்கு செக்கரியா சிறந்த எடுத்துக்காட்டு. பணத்திற்காக, பகட்டிற்காக, அழகிற்காக பெண்களை விவாகரத்து செய்யும் பழக்கம், இருக்கிற இந்த காலச்சூழ்நிலையில், பெண்களின் நிலை அடிமைப்பட்டிருந்த அன்றே, பெண்ணை முழுமையாக, உண்மையாக அன்பு செய்த செக்கரியா உண்மையில் போற்றுதற்குரியவர்.

ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)

Peirisnevis1@icloud.com
Peirisnevis1@icloud.com
1 day ago

தவ மலர்அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
நல்வாழ்த் துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு இறை ஆசீர்வேண்டி அன்போடு வாழ்த்துகிறேன்.

DAVID
DAVID
3 days ago

David Anthony Says:
17/12/2024at 12:30 Tuesday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய 
சித்தங்கொண்ட நம் 
இறைவனுக்கு நன்றி கூறி………………மனித நேயம் உணர்த்தும் மாதத்தில்…….

இறைவன் குரலில்:
——————————
17/12/24:திருவருகைக் காலம்,
3ம் வாரம் செவ்வாய்
தினமுமாகும்.
நற்செய்தி வாசகம்:
—————————-
“யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை” என்றார்.
(புனித மத்தேயு:21;32)

சிந்தனைக்கு:
———————————-
“இறையாட்சி”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இறையாட்சியின் விழுமியங்களான நேர்மை, உண்மை, சமத்துவம் போன்றவற்றை இயல்பாகவே கடைப்பிடிப்பவர்கள்.. இத்தகையோரைவிட நாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் குறைந்தவர்களே என்பது புலப்படுகிறது. எனவே, நாம் விழிப்பாயிருப்போம். நம் செயல்கள் நம் எண்ணங்கள், சொற்களுக்கிசைய அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..

DAVID
DAVID
3 days ago

David Anthony Says:
17/12/2024at 12:30 Tuesday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய 
சித்தங்கொண்ட நம் 
இறைவனுக்கு நன்றி கூறி………………
மனித நேயம் உணர்த்தும் மாதத்தில்…….

இறைவன் குரலில்:
——————————
17/12/24:திருவருகைக் காலம்,
3ம் வாரம் செவ்வாய்
தினமுமாகும்.
நற்செய்தி வாசகம்:
—————————-
“யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை” என்றார்.
(புனித மத்தேயு:21;32)

சிந்தனைக்கு:
———————————-
“இறையாட்சி”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இறையாட்சியின் விழுமியங்களான நேர்மை, உண்மை, சமத்துவம் போன்றவற்றை இயல்பாகவே கடைப்பிடிப்பவர்கள்.. இத்தகையோரைவிட நாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் குறைந்தவர்களே என்பது புலப்படுகிறது. எனவே, நாம் விழிப்பாயிருப்போம். நம் செயல்கள் நம் எண்ணங்கள், சொற்களுக்கிசைய அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..

Kandasamy segar
Kandasamy segar
3 days ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மன்னிப்புடன் இன்று
வாழ்வின் உண்மை நிகழ்ச்சி திடீர் சுகயீனம் காரணமாக  தவிர்கப்பட்டு மீண்டும் அடுத்த வாரம் தொடரும்.

இன்றைய நாளில் படைப்புக்களை படைக்கும் அனைவருக்கும் மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.

வாணியக்காவிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றென்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ இந்த
நாளில் வாழ்த்துகின்றோம்.

DAVID
DAVID
4 days ago

பிறந்த நாள் வாழ்த்து:
———————————
அன்பு தங்கை திருமதி. கலைவாணி மோகன் அவர்கட்!
எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் இறைவன் உடல், உள,ஆன்ம, சுகங்களோடு இன்னருள் தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன். “வாழ்க வளமுடன்.”
அன்பு அண்ணன்,
டேவிட்.(பிரான்ஸ்)
💐💐💐🎉🎂🍾👏.

சிவதர்சனி
சிவதர்சனி
4 days ago

பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 550

1.“இது மனிதனை பெருமைப்படுத்த வல்லது”..ஒன்பதெழுத்துச் சொல்?
2.முதல் எழுத்து மற்றும் கடைசி மூன்றெழுத்துக்கள் சேர நூல்களோடு தொடர்புடைய சொல்?
3.முதல் இரண்டு மற்றும் இறுதிச் சொல் சேர உணவுப்பொருள் ?
4.இறுதி ஐந்தெழுத்துக்களும் சேர சிலருக்கு இது …என்று சொல்லுவோம்

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  சிவதர்சனி
3 days ago

 பழக்கவழக்கம்
பக்கம்
பழம்
வழக்கம்

DAVID
DAVID
4 days ago

David Anthony Says:
16/12/2024 at 20:27
Monday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய 
சித்தங்கொண்ட நம் 
இறைவனுக்கு நன்றி கூறி…….
மனித நேயம் உணர்த்தும் மாதத்தில்…….

இறைவன் குரலில்:
——————————
16/12/24:திருவருகைக் காலம்,
3ம் வாரம் திங்கள்
தினமுமாகும்.
நற்செய்தி வாசகம்:
—————————-
“நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார்.”
(புனித மத்தேயு:21;24,25)

சிந்தனைக்கு:
———————————-
உண்மை, உறுதி!
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
நமது வாழ்விலும், சுயநலத்திற்காக, நமது பதவி, அதிகாரம், புகழைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பலவேளைகளில் உண்மையை உரைக்காது இருந்திருக்கின்றோம். பொய்மைக்கு உடந்தையாக இருந்திருக்கின்றோம். அதை தவறான தருணங்களாக உணர்வோம். உண்மைக்கு உறுதியாக குரல் கொடுப்போம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..

இரட்னேஸ்வரி மனோகரன்.
இரட்னேஸ்வரி மனோகரன்.
4 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாணி மகளே ,
புன்னகை பூத்த அழகு வதனமுடன் தினம், தினம் உந்தன் தரிசனம் கண்டு மனம் மகிழ்கிறது.தம்பதிகளாக இணைந்து நிற்கும் பொழுதுதான் அங்கே பெருமையும் பெருகுகின்றது.
சின்னவள் ராகவியுடனும் பற்பல சிறப்புக்கள் கண்டு,ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு, பல்லாண்டு மனமகிழ்வாக வாழ்க, வாழ்க என மனமாரவாழ்த்துகின்றோம்.
அன்பான இரட்னேஸ்வரி மனோகரன் குடும்பமாக…

Selvi Nithianandan
Selvi Nithianandan
4 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி

Parmila Arudkumar
Parmila Arudkumar
4 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாணி அக்கா 🎂🎂🎂🎂

Peirisnevis1@icloud.com
Peirisnevis1@icloud.com
4 days ago

மார்கழியில்மலர்ந்த வசந்த மலரே
மாமலராய் பாமுகத்தில்
தினம்தோறும் வீற்றிருக்கும்
கலை வாணியே!!
உன்அகவைத் திரு நாளில்
உன்னை மனம் நிறைந்து
வாழ்த்துகிறேன்.நோயற்ற வாழ்வும்
குறைவில்லா செல்வங்களும்
பெருகிவரும் சொந்தங்களுடன்
சீரும் சிறப்புமாய் நீடிய ஆயுள்கொண்டு
வாழ்க இறை ஆசீர் கூடி நிற்க
வாழ்த்துகிறேன்.அன்புடன்…

Iraa vijayagowri
Iraa vijayagowri
4 days ago

தினமும் மலரும் திங்களாய்
அகமும் மலர அன்பெழுதி
இனிதே தமிழின் இழை சேர
இணைந்து பாமுக ஒளிமுகமாய்
கலந்து கவினுற இளையோர் கை
பிடித்தே நடைபயில் மாமியிவர்
அகவைத்திருநாள் அகமகிழ்ந்தே
வாழ்த்தி மகிழ்வோம் வாழியவே
நீடு நீடு நலமுடன் பலமாய் வாழி வாழி

Jeyanthi Bala
Jeyanthi Bala
4 days ago

இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் குருக்கள்ஐயா
கல் வைத்த மோதிரம் எந்த கையில் எந்த விரலில் அணிவது நல்லது அத்துடன் கற்கள் தோஷ நிவர்த்திக்களுக்கு நல்லதா?
திருமதி வாணி மோகன் அவர்களுக்கு இறையாசியுடன் கூடிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சனிக்கிழமை நடைபெற்ற கார்த்திகாவின் பாமுக ஒளி விழா சிறப்பாக எல்லோருடைய பங்களிப்புடனும் இருந்தது எல்லோருக்ககும் வாழ்த்துக்கள்
அத்துடன் ஜெசி மணிவண்ணன் வாணி மோகன் இருவரும் பாடிய பாடல் வரிகளும் பாடிய விதமும் மனதை உருக்கியது எல்லோருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் மிகவும் நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
4 days ago

உற்சாக வணக்கம்
மனிதநேய மாண்பு போற்றும் திங்களில்…

உதயம் காணும் அகவையுடன்
உளம்நிறைந்த மகிழ்ச்சியுடன்
பாமுகத்து இயக்குனராய்
பலரிணைக்கும் வாழ்த்தொலியில்
என்றும் புன்னகை மகிழ்வுடன் வாணி வாழிய வாழிய பல்லாண்டு!
அன்பு வாழ்த்துக்கள் பல்கோடி!

Sarwaswary. K
Sarwaswary. K
5 days ago

நல்லினிய வாழ்த்துக்கள் நகுலா…

Sarwaswary. K
Sarwaswary. K
5 days ago

வன்னி மண்ணின் தமிழியின்
குரல் இனிமை…விசித்திரம் ரொம்ப ரொம்ப அசத்தலானது..வாழ்த்துக்கள்
செல்லம்…

Selvi Nithianandan
Selvi Nithianandan
6 days ago

புள்ளிகள் 587 (13.12 ..2024)
ஜெயா நடேசன் 164
ஜெசி மணிவண்ணன் 134
ராஜினி அல்போன்ஸ் 163
ஐெயமலர் ஐெயம் 196
வாணி மோகன் 197
நேவிஸ் பிலிப்ஸ் 128
சறோஜினி சோதிராஜா 140
நகுலவதி தில்லைத்தேவன் 139
தர்ஜ்னி சண்முகநாதன் 67 பத்மினி கமலகாந்தன்144
சிவமணி 50
வஜிதாமுகமட் 05
சிவதர்சினி 22
தமிழன்பன் 05 சாந்தினி 05
லோஜினி முகுந்தன் 60

Sarwaswary. K
Sarwaswary. K
7 days ago

இறைவனுடைய அற்புதமான கொடையாக இந்த தருணமாக இணைந்துள்ளது…மிக்க மகிழ்ச்சியாக எல்லோருமாக ஒன்றிணைந்த கிறிஸ்மஸ் விழாவாக பிரகாசித்தது…கார்த்திகாவின் உன்னதமான பணி வாழ்க….வாழ்க…
எல்லோர் அகத்தின் பிரகாசம்
முகத்தில் ஒளிர்ந்தது…
பாமுகத்தினூடாக கிடைத்தற்கரிய வாய்ப்பாக பதிவாக்கம் பெற்றுள்ளது…இறைவனுடைய கருணை புதிய ஆண்டில் துன்பம் துயர் தீர்வே விலகும்…அன்பும் பண்பும் மேலோங்கும் என்பதை இன்றைய ஒன்றிணைந்த பிரார்த்தனை கண்டுவரும் என்பதில் ஐயமே இல்லை…எல்லோருக்கும்
கிறிஸ்மஸ் நல்லினிய வாழ்த்துக்கள்…

DAVID
DAVID
7 days ago

David Anthony Says:11:40
13/12/2024
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “மனிதநேயம் உணர்த்தும்”மகத்தான மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
திருவருகை காலம் 2ம் வாரம் வெள்ளிக்கிழமை.
13/12/2024
நற்செய்தி வாசகம்:
——————————
« அக்காலத்தில் இயேசு கூறியதாவது: மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். »
என்றார்.
(புனித மத்தேயு:11:19)

சிந்தனைக்க
——————————
”குறை கூறுதல்”
——————————
சகோதர,சகோதரிகளே!
நமது வாழ்க்கையில் நாம் “குறை”கூறுகிறவர்களாக இருக்கிறோமா? அடுத்தவர் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்யும்போது, அதனைப் பாராட்டக்கூடியவர்களாக இருக்கிறோமா? சிந்திப்போம். மற்றவர்களைப் பாராட்டக்கூடிய மக்களாக வாழ முயற்சி எடுப்போம்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
7 days ago

உற்சாக வணக்கம்
மனிதநேய மாண்பு போற்றும் திங்களில் தொடரும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள்.
நத்தார் விழா பொன்மாலைப்பொழுது. நெறிப்படுத்தி இணைக்கும் கார்த்திகா மிகுந்த பாராட்டுக்கள்.
சீரான பார்வையுடன் சிறப்பாக மனிதநேயம் தாங்கி பண்ணிச்யும், பாலன் பிறப்பு நிகழ்வும் ஒன்றினைப்பது வெகு சிறப்பே பாமுகப் பணிக்கும் நன்றிகள் பங்குபற்றும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி
தொடரும் இளையோர் நிகழ்விற்கும் வார இறுதி நாட்களின் கொண்டாட்ட குதூகல மகிழ்விக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி

Selvi Nithianandan
Selvi Nithianandan
8 days ago

கேள்வி வாரம் 463
 வேட்டை நாய்கள் பந்தயதுக்கு தடைவிதிக்க கோரியுள்ள நாடு எது?
 சொந்த அத்தை அல்லது மாமன் மகளையோ।மகனையோ திருமணம் செய்ய தடை விதிக்க புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாடு எது?
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வியாழன் (இன்று) எந்தநாட்டுக்கு பயணமாக உள்ளார்?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Selvi Nithianandan
6 days ago

1. நியூசிலாந்து
2. இங்கிலாந்து
3. போலந்து

DAVID
DAVID
10 days ago

David Anthony Says:10:45
10/12/2024,
Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!

இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!

இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “மனிதநேயம் உணர்த்தும்”மகத்தான மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
திருவருகை காலம் 2ம் வாரம்செவ்வாய்கிழமை.
10/12/2024.

நற்செய்தி வாசகம்:
——————————
”உறுதியாகஉங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”
என்றார்.
(புனித மத்தேயு:18:13,14)

சிந்தனைக்கு:
——————————
” இறையன்பு”
——————————
சகோதர,சகோதரிகளே!
கடவுளின் “இறை அன்பை” நமது வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் உணர வேண்டும். எத்தனை புத்தகங்கள் படித்தாலும், மறையுரைகள் கேட்டாலும், தனிப்பட்ட விதத்தில் கடவுளின் இறை அன்பை உணரவில்லையென்றால், அவையனைத்துமே வீணானது.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்

Kandasamy segar
Kandasamy segar
10 days ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

வாழ்வின் உண்மை 255 வது வாரத்திற்கான தலைப்பு

மனிதநேயம்

சமகாலத்தில் மனிதநேயம் உங்கள் பார்வையில் எப்படி இருக்கின்றது .உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்..
மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.

Sivatharsany
Sivatharsany
11 days ago

பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 549

அதிகம் ஈர்க்கப்படுவது பெண்கள் தான்””
ஏழெழுத்துச் சொல்?
1.முதல் மற்றும் கடைசி எழுத்து சேர மனிதருக்கு அத்தியவசியமானது?
2.நான்கும் ஏழும் சேர இதனால் துன்பம் நேருவது உண்டு?
3.இறுதி இரு எழுத்துகளும் சேர இதனால் கிடைக்கும் பதன்கள் அதிகம்?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Sivatharsany
10 days ago

மலிவுவிற்பனை
மனை
வினை
பனை

DAVID
DAVID
11 days ago

David Anthony Says:
09/12/2024 at 13:23
Monday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய 
சித்தங்கொண்ட நம் 
இறைவனுக்கு நன்றி கூறி…….
மனித நேயம் உணர்த்தும் மாதத்தில்…….
இறைவன் குரலில்:
——————————
09/12/24:திருவருகைக் காலம்,
2ம் வாரம் திங்கள்
தினமுமாகும்.
“புனித அமலோற்பவ மாதா திருநாள்”
நற்செய்தி வாசகம்:
—————————-
“ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்”என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்
(புனித லூக்கா:1;37,38)

சிந்தனைக்கு:
———————————-
“விசுவாச அறிக்கை.”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
விசுவாசம், கடவுள் நம்பிக்கை இவை மூட நம்பிக்கை அல்ல. நிரபராதியான தன்அன்பு மகனை இளம் வயதில் குற்றவாளியாகச் சிலுவையில் அறைந்து கொன்றதை அமைந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது.இது விசுவாசம். ‘நான் ஆண்டவரின் அடிமை’ என்றதன் வாழ்க்கை வடிவம். இந்த விசுவாச அறிக்கையும் வாழ்வும் நம் அன்னையை உலகம் போற்றும் பெண்ணாக, விண்ணக அரசியாக உயர்த்தியுள்ளது. அந்த அன்னையை வேண்டுவோம். அருள் நிறைந்த மரியே வாழ்க.. .. ..இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..

Sarwaswary. K
Sarwaswary. K
12 days ago

அழகான சிறப்பான மலர்களின் உணர்வுபூர்வமான உன்னதமான சங்கமம் …ஞாயிறு மாலைகளில் மிக்க அருமையான சிறப்பான தருணமாக காண்கிறோம்…ஒவ்வொருவிதமான தங்களுடைய சுயதிறமைகளை பகிரும் விதமும் சிறப்போ சிறப்பு…எல்லாச் செல்லங்களுக்கும் வாழ்த்துக்கள்..

Sarwaswary. K
Sarwaswary. K
12 days ago

பூமிக்குவந்த வழித்தோன்றலை தெளிவான பாதையாக என்றுமே நிலைத்திருக்க வைத்திருக்க பாமுக அதிபரின் வழிகாட்டி தலைப்புடன் இணைந்துள்ள எல்லோருக்கும் உற்சாகமான வாழ்த்துக்கள்…அருமை…படங்களும் இணைந்ததால் சிறப்பான உருவாக்க உரை அரும்பாக கண்ணுற்றோம்…வாழ்த்துக்கள்…

Sarwaswary. K
Sarwaswary. K
12 days ago

எல்லோருக்கும் வணக்கம்…ஞாயிறு விடியலை உற்சாகமான நிமிடங்களாக ஆக்கிவைத்த அற்புதமான இளைய வாரிசுச் செல்லங்கள்
எல்லோருக்கும் மகிழ்வான நல்லினிய வாழ்த்துக்கள்….நெருங்கி வரும் கிறிஸ்மஸ் நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்க
எங்களுடைய வாழ்த்துக்கள்.

DAVID
DAVID
12 days ago

David Anthony Says:10:45
08/12/2024,
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “மனிதநேயம் உணர்த்தும்”மகத்தான மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
திருவருகை காலம் 2ம் வாரம் ஞாயிற்றுக்கிழமை.
08/12/2024.

நற்செய்தி வாசகம்:
——————————
“நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.
(புனித மாற்கு:1,8)

சிந்தனைக்கு:
——————————
“ விழிப்பு.”
——————————
சகோதர,சகோதரிகட்கு!
“திருவருகைக்காலம் என்பது, கடவுளின் வருகைக்காக நம்மையே தயாரிக்கின்ற காலம். கடவுளை எதிர்கொள்ள, கடவுளை நம்முள் வரவேற்க ஆயத்தமாக இருக்கக்கூடிய காலம். அத்தகைய காலத்தில் நாம் நம்மையே ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து, அவரை வரவேற்க “விழிப்பாக” ஆயத்தமாவோம்..
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)

Selvi Nithianandan
Selvi Nithianandan
13 days ago

புள்ளிகள் 585 (06.12 ..2024)
ஜெயா நடேசன் 150
ஜெசி மணிவண்ணன் 124
ராஜினி அல்போன்ஸ் 149
ஐெயமலர் ஐெயம் 183
வாணி மோகன் 178
நேவிஸ் பிலிப்ஸ் 120
சறோஜினி சோதிராஜா 123
நகுலவதி தில்லைத்தேவன் 127
தர்ஜ்னி சண்முகநாதன் 67 பத்மினி கமலகாந்தன்132
சிவமணி 45
வஜிதாமுகமட் 05
சிவதர்சினி 22
தமிழன்பன் 05 சாந்தினி 05
லோஜினி முகுந்தன் 60

DAVID
DAVID
13 days ago

David Anthony Says:11:15
07/12/2024,
Saturday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி, “மனிதநேயம் உணர்த்தும்”மகத்தான மாதத்தில்,
“தாய் மொழியாம் தமிழ் மொழியை வாழ்வியலாக்குவோம்.”
இறைவன் குரலில்:
——————————
திருவருகை காலம் 1ம் வாரம்,சனிக்கிழமை.
07/12/2024
நற்செய்தி வாசகம்:
——————————
“அக்காலத்தில் இயேசு கூறியதாவது: `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்.என்றார்.
(புனித மத்தேயு:10: 7-8)

சிந்தனைக்கு:
——————————
“நமதுவாழ்வு.”
——————————
சகோதர,சகோதரிகட்கு!
“நமது வாழ்வு மக்களுக்காக இருக்க வேண்டும்.” எந்நேரமும் மக்கள் பணியே, நமது வாழ்வின் மூச்சாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற, இந்த வல்ல செயல்களின் மூலமாக, ஏழைகளின் கண்ணீர் துடைப்பின் மூலமாக, கடவுளின் நாமம் புனிதப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே,
இறைவா! உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்

DAVID
DAVID
14 days ago

David Anthony Says:
06/12/2024at 12:36
Friday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மனித நேயம் உணர்த்தும் மாதத்தில்,………

இறைவன் குரலில்:
06/12/24:திருவருகைக் காலம்,
1ம்வாரம், வெள்ளி
தினமுமாகும்.

நற்செய்தி வாசகம்:
——————-
அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.”என்றார்.
(புனிதமாற்கு:16;15,16)

சிந்தனைக்கு:
———————————-
“சான்று பகிர்தல்.”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி ”நற்செய்தி அறிவித்தல்” ஆகும். இது வெறும் வார்த்தைகளால் நடைபெறுகின்ற நிகழ்வு அல்ல. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் கடைப்பிடிப்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இதையே நாம் ”சான்று பகர்தல்” என்கின்றோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..

Rajani Anton
Rajani Anton
14 days ago

வாணி மோகனுக்கும் மற்றும் பாமுக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்…எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பாமுகஉறவுகள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி. அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்….வாணி மோகனின் தொடர் பணிக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்.

DAVID
DAVID
15 days ago

David Anthony Says:
05/12/2024 at 18::30
Thursday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மனித நேயம் உணர்த்தும் மகத்தான மாதத்தில்,…….

இறைவன் குரலில்:
05/12/24:திருவருகைக் காலம்,
1ம்வாரம், வியாழன்
தினமுமாகும்.

நற்செய்தி வாசகம்:
——————-
“அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரேசெல்வர்.”
என்றார்.
(புனிதமத்தேயு:7;21)

சிந்தனைக்கு:
———————————-
“நற் சீடர்கள்.”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
இன்றைக்கு இயேசுவின் சீடர்களாக தங்களையே மக்களிடத்தில் காட்டிக்கொள்கிற பலர், வெறும் உதட்டளவு சொற்பொழிவாளர்களாகவே இருக்கின்றார்கள். அதிகமாகப் பேசுகின்றனர். மக்களின் கவலைகளை பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இதன் மூலம் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்கிறவர்களாக இருக்கின்றார்கள். நல்ல சீடர்களாக வாழக்கூடிய அருள் வேண்டி, மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..

Sivamainthan
Sivamainthan
16 days ago

How to find to see our record programme

Example
உதீப்பூக்கள்

DAVID
DAVID
16 days ago

David Anthony Says:
04/12/2024 at 12:35 Wednesday
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மனித நேயம் உணர்த்தும் மகத்தானமாதத்தில்………

இறைவன் குரலில்:
04/12/24:
திருவருகைக் காலம்,
1ம்வாரம், புதன்
தினமுமாகும்.

நற்செய்தி வாசகம்:
——————-
“இயேசு தம் சீடரை வரவழைத்து, நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கின்றார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார்.
(புனிதமத்தேயு:15;32),
சிந்தனைக்கு:
———————————-
“துயர் துடைப்பு.”
————————————
அன்பு சகோதர,சகோதரிகளே!
ஏழை, எளியவர்களின் ஒட்டுமொத்த துயரைத் துடைப்பது, இயேசுவின் பணியாக இருக்கின்றது. முழுமை தான் பணிவாழ்வின் நிறைவு. உடல் நோய்களைக் குணப்படுத்துகின்றார். பசிக்கிறவர்களுக்கு உணவும் கொடுக்கின்றார். இன்றைய திருச்சபையின் ஒட்டுமொத்த பார்வை, இத்தகைய நிறைவை நோக்கியதாகத்தான் இருக்கின்றது. அதுதான் நமது இலக்காகவும் இருக்க வேண்டும்.”இத்திருவருகை காலத்தில் பசி, பட்டினியோடு இருப்பவர்களுக்கு உதவ முன் வருவோம்.”
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..

Jeyanthi Bala
Jeyanthi Bala
16 days ago

இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன் Doctor
மருத்துவருக்கான வினா
தற்பொழுது அநேகமான நோய்களுக்கு வைத்தியர்கள் “ கொற்டிஷோன் “ என்ற மருந்தினை அல்லது “ கொற்டிஷோன் “ கலந்த மருந்துகளை கொடுக்கின்றனர்
எனது கேள்வி என்னவென்றால்
1. அந்த மருந்தைப் பற்றிய விளக்கம்
2. ⁠உடலில் அதன் செயற்பாடு என்ன?
3. ⁠அது நோ, வலிக்குரியதா?
4. ⁠தொடர்ந்து உள் எடுப்பது நல்லதா?
5. ⁠உடம்பில் என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்?
6. ⁠தொடர்ந்து எடுப்பது நல்லது இல்லை என்று சோல்கிறார்கள் இவற்றிக்கு விளக்கமான பதில் தயவு செய்து தரவும்
7. ⁠மிகவும் நன்றி தொடந்தும் இன்றைய நிகழ்வுகள யாவும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்.

ராணி சம்பந்தர்
ராணி சம்பந்தர்
17 days ago

வணக்கம் வாணி மோகனிற்கும், மிகவும் இனிமையாகப்
பாராட்டிய பா வை அண்ணாவிற்கும் கவிஞர் மதிமகனிற்கும்
வாழ்த்துகள் நன்றிகள்.

DAVID
DAVID
17 days ago

David Anthony Says:
03/12/2024 at 19:00
Tuesday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி……….

இறைவன் குரலில்:
03/12/24:திருவருகைக்
காலம்,
1ம் வாரம், செவ்வாய்
தினமுமாகும்.

நற்செய்தி வாசகம்:
—————————-
« இயேசு அவர்களைப் பார்த்து, என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
(புனித மத்:4;19,20)

சிந்தனைக்கு:
———————————
“சுயநலம்.”
———————————-
அன்பு சகோதர,சகோதரிகளே!
இன்றைய உலகில் சகோதரப்பாசம் என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய அளவில் தான், சகோதரர்களுக்கு இடையேயான பாசம் இருக்கின்றது. திருமணம் முடிந்தவுடன், தங்களுக்கென்று குடும்பம் வந்தவுடன், பாசம் மறைந்து, பணமும், சொத்தும் மிகப்பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன. பணத்திற்காக, சொத்திற்காக கொலை செய்யக்கூடிய அளவுக்கு சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடன்பிறந்தவர்களை, பிறரைஅன்பு செய்யும் வரம் வேண்டி, இன்றைய நாளில் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்

Selvi Nithianandan
Selvi Nithianandan
17 days ago

புள்ளிகள் 584 (03 .12 ..2024)
ஜெயா நடேசன் 143
ஜெசி மணிவண்ணன் 117
ராஜினி அல்போன்ஸ் 142
ஐெயமலர் ஐெயம் 174
வாணி மோகன் 171
நேவிஸ் பிலிப்ஸ் 113
சறோஜினி சோதிராஜா 116
நகுலவதி தில்லைத்தேவன் 120
தர்ஜ்னி சண்முகநாதன் 62
பத்மினி கமலகாந்தன்135
சிவமணி 45
வஜிதாமுகமட் 05
சிவதர்சினி 22
தமிழன்பன் 05 சாந்தினி 05
லோஜினி முகுந்தன் 55

kandasamy segar
kandasamy segar
17 days ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

வாழ்வின் உண்மை 255 வது வாரத்திற்கான தலைப்பு

மனிதநேயம்

சமகாலத்தில் மனிதநேயம் உங்கள் பார்வையில் எப்படி இருக்கின்றது .உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.

Sivatharsany
Sivatharsany
18 days ago

பொது அறிவுக் கேள்விச்சரம் 548!!

அறிவு விருத்தி இதனாலும் நிகழும்!
ஐந்தெழுத்து சொல் ஒன்று!!

1.ஒன்றும் மூன்றும் சேர வணங்கும் நிலையிலுள்ள ஒன்று?
2.மூன்று நான்கு சேர ஒரு எண்ணைக் குறிக்கும்?
3.ஒன்றும் நான்கும் சேர ஒரு விலங்கு வகை?
4.மூன்றும் ஐந்தும் சேர இது ஒரு உணர்வு!?
5.மூன்று நான்கு ஐந்து சேர ஒரு இயந்திரம்?
6.முதலும் இறுதியும் சேர இது இல்லாவிடில் நாடு சிறக்கும்!!?

DAVID
DAVID
18 days ago

02/12/2024 at 19:30 Monday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,……..
இறைவன் குரலில்:
02/12/24:திருவருகைக்
காலம்,
1ம் வாரம், திங்கள்
தினமுமாகும்.

நற்செய்தி வாசகம்:
—————————-
« ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கின்றான்” என்றார். இயேசு அவரிடம், ”நான் வந்து அவனைக் குணமாக்குவேன்”
என்றார்.(புனித மத்:8;6,7)

சிந்தனைக்கு:
———————————
“நூற்றுவர் தலைவன்”
———————————-
அன்பு சகோதர,சகோதரிகளே!
இன்றைக்கு மனிதர்களை மனிதர்களாகப்பார்க்காமல், அவர்களுடைய சாதி அடிப்படையிலே நாம் பார்க்கின்றோம். நமது உறவும் அதற்கேற்பதான் அமைகின்றது. நாம் மற்றவரோடு நெருங்கிப்பழகுவதற்கு நமது சாதியும், புவியியல் பிண்ணனியும் தான் காரணமாக இருக்கின்றது. மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதற்கும் இதுதான் காரணமாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் நூற்றுவர் தலைவரின் மனநிலையைப்பெற்றுக் கொள்ள மன்றாடுவோம்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

Jeyanthi Bala
Jeyanthi Bala
18 days ago

இனிய காலைவணக்கம் திருமதி வாணிமோகன் , குருக்கள்ஐயா
ஒரு நம்பிக்கையின் காரணமாக கல் வைத்த மோதிரம் அணிகிறோம் அதனை எந்த கையில் எந்த விரல்களில் அணிவது நல்லது?
அந்த கல்லுகள் தோசங்களை நிவர்த்தி செய்யுமா?
மிகவும் நன்றி
தொடர்ந்தும் இன்றைய பாமுக நிகழ்வுகள்யாவும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்

DAVID
DAVID
19 days ago

David Anthony Says:
01/12/2024 at 17:50 Sunday.
அன்பு பாமுகம் 
தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் 
நல்வாழ்த்துக்கள்.
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,……………….

இறைவன் குரலில்:
01/12/24:திருவருகைக்
காலம்,
1ம்ஞாயிறு
தினமுமாகும்.

நற்செய்தி வாசகம்:
—————————-
“மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
(புனித லூக்கா:21;35,36)

சிந்தனைக்கு:
———————————
“விழிப்பு.”
———————————-
அன்பு சகோதர,சகோதரிகளே!
வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும்; வருகின்ற சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளப் பயன்படும்; தடைகளைக் கண்டு தளர்ந்து போகாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்ற வலிமையை நமக்குத் தரும். எனவே, விழித்திருப்போர் பொறுப்பான விதத்தில் செயல்படுகின்ற மனிதராக விளங்குவர்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்! உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
தொடரும்…………..

Selvi Nithianandan
Selvi Nithianandan
20 days ago

புள்ளிகள் 583 (29.11 ..2024)
ஜெயா நடேசன் 136
ஜெசி மணிவண்ணன் 110
ராஜினி அல்போன்ஸ் 134
ஐெயமலர் ஐெயம் 166
வாணி மோகன் 171
நேவிஸ் பிலிப்ஸ் 105
சறோஜினி சோதிராஜா 114
நகுலவதி தில்லைத்தேவன் 115
தர்ஜ்னி சண்முகநாதன் 62 பத்மினி கமலகாந்தன்128
சிவமணி 43
வஜிதாமுகமட் 05
சிவதர்சினி17
தமிழன்பன் 05 சாந்தினி 05
லோஜினி முகுந்தன் 55

Selvi Nithianandan
Selvi Nithianandan
22 days ago

இரவு வணக்கம்
சாந்தினியின் கேள்விகளுக்கு
அழகாய் பதிலளிக்கும் அபிராமிக்கு வாழ்த்துக்கள்.சிறப்பான உரையாடல்.வாழ்த்துக்கள் இருவருக்கும்

Sarwaswary. K
Sarwaswary. K
22 days ago

உற்சாகமான வணக்கம்…பாமுக முற்றத்திலே அரும்பிய அழகான மொட்டினை இன்று அந்த பற்பல ஆற்றல்மிக்க ஆளுமைமிக்க மணம்கமழும் மலராக அகில விழிகளைஅகல விரிந்திட வைத்துள்ள சாந்தினிக்கும்….அபிராமிச் செல்லத்திற்க்கும் மகிழ்வான நல்லினிய வாழ்த்துக்கள்…