Abirami manivannan

கவி அரும்பு 180 கல்லறை வீர்ரின் கனவிதுவோ கல்லறை வீரரின் மண்னை காக்க சென்றவரே பாசமான அம்மாவை விட்டு எம்மா காக்க சென்றவரே கார்த்திகை உனக்கே மழையும் கண்ணீர் வடிக்கிதே உங்களுக்காய் விளக்கேற்றி அழுது வணங்குகிறேன் நன்றி அபிராமி

ஜெயம் தங்கராஜா

கவி 701 கல்லறை வீரரின் கனவிதுவோ மொழியை உயிராக்கி இனத்தை உயர்வாக்கினாரே நில விசுவாசிகள் தேசத்தைப் பற்றிய கனவு சாவுக்குப் பக்கத்தில் வாழ்க்கை உண்ணாது உறங்காது சுமையைச் சுமந்து ஊரைக்காத்தார்கள் சுவாசத்தின் வெப்பம் தணியவில்லை வீரத்தின் தீரம் தீரவில்லை தம் கனவு ஒருநாளில் நிஜமாகுமென கொண்டு நெஞ்சில் காவிய இலட்சியத்தோடு உறுதியோடு போராடி நன்று கொடியவர்களை வேட்டையாடி தாயகத்தைக் காத்திடவே என்று மேனியைத் துளைத்தாலும் குண்டு வீழ்ந்திடும் முன்பே கயவனைக் கொன்று கலாசாரத்தை களங்கப்படுத்தி சீரழிக்கவைக்கும் இன்றைய […]

நகுலா சிவநாதன்

கல்லறை வீரரின் கனவிதுவோ! கல்லறை வீரரின் கனவிதுவோ சொல்லறையில் விழுந்த செய்தி தாயக விடுதலை ஒன்றே தாகமாய் தரணியில் போராடிய வீhர்கள் விடிந்தும் விடியாத வீரராய் மண்ணிலே களமாடிய தியாகங்களே! நாட்டு விடுதலையை காட்டமாய் நேசித்து தேட்டத்தை தேசத்திற்காய் ஆகுதியாக்கினீர் கல்லறையில் உறங்கினாலும் உங்கள் கனவு மண்மீட்பு மட்டும்தான் வீர தியாகங்களாய் விண்ணுலகில் சென்றாலும் தீரமாய் களமாடிய வேங்கைகளே! மடிந்தும் மடியாத மாவீரரே! கல்லறையில் வித்தானாலும் கனவு தாய்மண்மீட்பே! நகுலா சிவநாதன் 1740

வசந்தா ஜெகதீசன்

கல்லறை வீரர்கள் கனவிதுவோ… விழிமூடி உறங்கிடும் வீரரே விடுதலை வித்தான தோழரே கல்லறைக் காவியம் கருக்கொள்ளும் காலத்தின் நாற்றாய் விதையூன்றும் தாயக மீட்பே தாகமாய் தன்னுயிர் ஈகையின் தியாகமாய் மண்மீட்பில் மறவராய் உயீர்ந்தீர் மாவீரர் கனவோடு மண்சாய்ந்தீர் அழுகுரல் அவலங்கள் அனர்த்தங்கள் ஆகுதியானவர் வேட்கைகள் அளவிட முடியாத போர்வலி அன்னை மண்மீட்பில் தினசரி ஈகையில் உருகிய தீபங்கள் எரிமலைக் குமுறலின் சீற்றங்கள் வேரெனத் தாங்கிய வீரரே கனவது ஈழமே தாகமாய் கருத்தரித்துள்ள கல்லறை யாகமாய் மீளவும் மீளவும் […]

கெங்கா ஸ்ரான்லி

கல்லறை வீர்ரின் கனவு ————— கல்லறை எதனால் வந்தது கண்டமே அதற்குள் அடங்கியதே சொன்னவற்றை செய்தார்களா சோகம் தானே மிஞ்சியது ஏமாற்றத்தால் கேட்டது தாய்மண் சுதந்திரம் பட்டது மனதில் போராட்டம் தொட்டது உணர்ச்சிப் பிழம்பு விட்டது வேங்கைகளின் வேலம்பு பேச்சு வார்த்தை பெரும் விகடம் பேசிப்பேசி காலம் போனது ஆகவே ஆயுதம். தரிக்கப் பட்டது அதனாலென்ன வீர வேங்கைகள் வெற்றி யீட்டினர் எதிரியின் அறமற்ற போரினால் அழிந்தது தமிழ்மக்கள் எம்மவர் அறம் கையாண்டதால் இழந்தது எம்மினத்தை இளவயதிலும் […]

ரஜனி அன்ரன்

கல்லறைவீரர் கனவிதுவோ…..! கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.11.2023 விடியல் கனவினை விழிகளில் ஏந்தி தாயகக் கனவினை நெஞ்சினில் சுமந்து இலக்கினை நோக்கிய இலட்சியக் கனவோடு செங்களமாடி வெஞ்சமர் புரிந்த வீரமறவர்களே உம் கனவும் நினைவும் தாயகக் காதலே ! உரிமையை வெல்ல ஒற்றுமையைப் பலமாக்க உலகே வியந்துநிற்க உயிர்த்தியாகம் செய்த உன்னதரே தியாகத்திலும் தியாகம் அல்லவா உங்கள் தியாகம் தேகத்தை ஈகம் செய்த தேசமறவர்களே கல்லறைத் தொட்டிலில் தூங்கிடும் தூயவரே உங்கள் கனவும் நினைவும் தாயகக் காதலே […]

இரா.விஜயகௌரி

கல்லறை வீரரின். கனவிதுவோ……. கல்லறை தாங்கும் வித்துடல்கள் கருவறை தாங்கிய உறவறுத்து கண்நிறை தாய்மடி தோள்தாங்கி வித்துடலானார் உறவுகளே அவர் நெஞ்சறை தாங்கிய உணர்வலைகள். உயிர். எழுச்சி மறந்து. நாம் இங்கு வாழ்வதுவோ உறவுகள். கரைந்தழ. விடுவதுவோ ஒற்றுமை. வேதம் உயிர் கலந்தார் உயிர்ச்சிலுவை. சுமந்தவர் களம் கண்டார் நிமிர்ந்து எழுந்தே நேசம் கொண்டு தாய்த்தமிழ் ஒன்றே உயர்வென்றார் தமிழே எங்கள் வாழ்வியலாய் -எம் தலைமுறை காவும் உயிர்த்தொடராய் தாயகம் நிலைத்தெழும் உறவுகளை வாழும் வழிவகை. ஊன்றி […]

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.11.23 கவி இலக்கம் -292 கல்லறை வீரனின் கனவிதுவோ சொல்லணாத் துயரம் கல்லறை வீரனின் மௌனம் ஒரு முறையல்ல பல முறை அவலம் 1956 இல் தொடங்கிய வன்முறை இன்றுந் தொடரும் பல வழிமுறை ஆண்டு வந்தவரோ தோண்டிடும் யுக்தி பேரினவாதியின் கருவறையிலே வென்றிடும் தமிழ் மந்திரிமாரோ வயோதிபக் கோளாறு அரைகுறையிலே இனியும் தொடர் மந்திரம் பாடாது கனிந்துவரும் காளையரில் கொடுத்திடு துப்பாக்கி கையில் எடுக்காது நாவைக் கூர்மையாக்கி அகிலமும் திரண்ட இளையோரே! முரண்டு பொங்கி எழுந்திடு […]

Selvi Nithianandan

கல்லறை வீரர்களின் கனவிதுவோ (590) தாய்மண்ணை மீட்க தன்னுயிரை தியாகம் செய்த வேங்கைகள் கனவுகள் ஒருபுறம் கல்லறை மறுபுறம் சாட்சியாய் சான்றுகள் காலமும் செல்லுதே ஞாலமும் அழுகுதே கல்லறை ஒளியும் காவியம் ஆகுதே வீரமறவர்களின் தியாகம் வீண்போகாது பாரினில் விதையாய் விருட்சமாய் விசாலமாய் வேறூன்றும் எம்உயிரை காக்க ஈகைசெய்த செம்மல்கள் இருகரம் ஏந்தியே ஆவலாய் காத்திருப்போம்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1904! கல்லறை வீரரின் கனவிதுவோ..! விழி மூடித் தூங்கும் வீரர்களே நீவிர் கண்ட கனவிதுவோ நாம் எதை உரைப்போம் தேசத்தின் விடியலுக்காய் உயிர் அமுதைத் தந்தே உறங்கும் மாவீரரே உங்கள் கனவின் தீரம் அறியாதவராய் நாமோ…! ஒன்றுபட்ட ஓர் தேசம் ஒற்றுமைப்பட்ட எம் இன சுதந்திர வாழ்வு அடிமைத் தழை ஒடித்து அரக்கத்தனம் கொண்ட எதிரியை எதிர்த்து எத்தனை களங்களைக் கண்டவர் நீவிர்…! இன்றோ இலக்கு எது என்பதும் அறியாதவராய் வேற்றுமைப் பட்டு வேரறுந்து […]