29.03.2022
சந்தம் சிந்தும் வாரம் -168
„தாய்மண்ணே வணக்கம்“
சின்னஞ்சிறு தீவே சிரித்திருந்த பூவே
உன்றன் எழிலழகு உருகியதும் ஏனோ /
வெள்ளைமன மக்கள் வீற்றிருந்த மண்ணில்
பிள்ளையழும் பஞ்சப் பிணி வந்ததேனோ /
சுட்டமண் தாய்நாட்டை சுந்தர தமிழராண்டான்
கட்டிக்காத்த நாட்டுபற்றறுத்து கடல்தாண்டி மீண்டும்பயணம் /
சுற்றுலா தளமழகை சூட்டிய பசுமையே
ஏற்றுமதி தேயிலையும் ஏற்றம்கண்ட என்நாடே /
யுத்த காலத்தில் யுகத்தை கைவிடவே
சத்தமின்றி அயலவன் சதிதிட்டம் தீட்டினர் /
திட்டம் போட்டு நாடையாழ திசைக்கொருவன் நின்று
வட்டமிடும் கழுகுகூட்டம் வஞ்சக நெஞ்சத்தினர் /
தாய்மண்ணே வணங்குகின்றேன் தார்மீக பற்றுடனே
மாய்ந்திடாதே மலர்ந்திடுவாய் மகிழ்ந்திடுவேன் மண்மீதில் /
நன்றி வணக்கம் பாவைஅண்ணா🙏