உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம்

மாற்றம்

“ மாற்றம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 05.09.2024 மாறும் உலகின் விதியில் மறைந்த விடியலின் கனவில் மறந்து போகும் கணத்தில் மாற்றமும் மலருதே நொடியில் மாற்றமென்பது உலகியல் நியதி மாற்றமென்பது வளர்ச்சியின் அடையாளம் ! நீரின் ஓட்டம் மாறினாலும் நிலாவின் ஒளிகூட சுருங்கினாலும் மாறிக் கொண்டேயிருக்கும் மாற்றங்கள் முடிவற்ற பாதை தனில் முடிவடையும் கனவுகூட மாறிடும் வாழ்க்கைப் பயணமதில் மாற்றங்கள் திருப்பங்களாகிட ஏமாற்றங்கள் மனதைக் காயமாக்குமே ! மலரும் பூவின் வாட்டம் போல் மறந்து போகுமே கடந்தகாலமும் மாறியது நேற்றைய நாளும் மாறுமே நாளைய வேளையும் நிமிசம் மாறும் வருசம் மாறும் நமக்கும் மாற்றம் நிட்சயமே காலத்தின் வலிகளை மறக்க வாழ்வில் ஏற்றம்காண வேண்டுமே மாற்றம் ! https://www.youtube.com/watch?v=UBVTOELeOA8