உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம்

மாற்றம்

கவி 739 மாற்றம் மூளையை மூலதனமாக்கு மாற்றங்கள் நிகழும் கோழையாய் இருந்திடின் வாழ்க்கையே இகழும் மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை மாற்றிக்கொண்டால் உன்னை காலத்திற்கேற்ற பிள்ளை பழைய பல்லவியை எப்போதும் பாடுவதா தலைப்புச்செய்தியாக்கி அலுக்காமல் இன்றும் ஓட்டுவதா விந்தையான உலகத்தில் குந்தியே இருந்துகொண்டு சிந்தையினை மாற்றாமல் எவ்வவளவுகாலத்திற்குத்தான் என்று காலத்தேவை அறிந்து கருத்துக்களும் மாறும் வாழத்தெரிந்தவர்கள் அடைவார்கள் இதனால் பேறும் பழகிய வாழ்வியலிலிருந்து புதிதான மாற்றம் உலகிலே இதுதான் வாழ்க்கைக்கான தேற்றம் பழையன கழிதலும் புதியன புகுதலும் கலையன்றோ வாழ்வு கற்றலும் தெளிதலும் இல்லை மாறமாட்டேன் என்பது மடமை கல்லாக வாழ்க்கையை கழிப்பது கொடுமை புதிய வருகைகள் தவிர்க்க இயலாதது இதிலே முரண்படின் வாழ்க்கையும் செல்லாதது காலத்தின் தேவைகருதி சிந்தனையில் மாற்றம் ஞாலத்தில் தந்துவிடும் அதுவே முன்னேற்றம் ஜெயம் 04-09-2024 https://youtu.be/RkiYa_QtWZk?si=9V6s4OyoVnc436_i