உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“மாற்றம்”

“மாற்றம்”

காலச் சுழற்சியிலே மாறி வரும் உலகினிலே மாற்றம் ஒன்றே மாறாதது நாகரீக வாழ்க்கையிலே மோகம் கொண்டு வாழ்கின்றோம் வரலாற்றை மறந்தோம் பண்பாட்டை இழந்தோம் வாழ்க்கை முறையை வாடிக்கை வழக்கங்களை மாற்றி விட்டடோம் வேர் தேடி ஊற்றுத்தேடி பழமையின் அழகினை இரை மீட்டி நவீனத்தோடு சவால் தொடுக்க முனைப்போடு ஓடுகின்றோம் பழமையை புதுப்பித்து பாரம்பரிய நடை முறைக்கு புத்துயிரூட்ட ஏனோ மறந்திட்டோம் கதை சொல்லிகள் அருகிப் போக கேட்பவர்கள் ஆர்வம் குன்ற சொல்வதற்கும் ஆளில்லை கேட்பதற்கும் நேரமில்லை் மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ.? தார்மீக எண்ணங்களை ஆழ வேரூன்றி அகலக் கிளை பரப்ப மாறுவோம் மாற்றம் காண்போம் நன்றி வணக்கம். நேவிஸ் பிலிப்