உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உள்ளமதில் ஏற்றிடுவாய்

உள்ளமதில் ஏற்றிடுவாய்

உள்ளமதில் ஏற்றிடுவாய் காலம் உறங்காது கடமை ஓயாது/ சாலம் தேவையில்லை சாதிக்கவேண்டும் எத்தனையோ// எண்ணத்திலே பாத்திகட்டி ஏதுமே செய்யாமல்// வண்ணத்திரை போட்டால் வகையும் அறியலாமா// கண்ணைமூடிக் கனவுகாணும் மானிடா காசினியை உணர்ந்துவிடுவாய்// சீரியகுணம் வேண்டும் செய்வதைச் சொல்லவேண்டும்// வாரியே அணைத்திடுவாய் வழுவாத விழுமியத்தை/_ பாருமோ சிறந்திடவே பண்புடன் நடந்திடுவாய்/_ பகுத்தறிவுடனே பார்ப்பாய் பாங்காய் மிளிரவும்// வகுப்பாய் நன்னெறிதனையும் வரிப்பாயே மனதிலென்றும்// துடுப்பாய் பயன்படுவாய் துரிதமும் கொண்டிடுவாய்// எடுப்பாய் நேர்வழியில் தொடுப்பாய் பயணத்தை// விடுப்பாய் எண்ணிவிடு நல்லெண்ணம் கூடிடவே// தடுப்பாய் அதர்மங்களை தர்மமே வெல்லுமென்று// உண்மையைச் சொல்லுகின்றேன் உள்ளமதில் ஏற்றிடுவாய்// சிவருபன் சர்வேஸ்வரி