உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கஞ்சா

கஞ்சா

கவி 732 கஞ்சா தாழ்விலும் வாழுபவன் வாழ்க்கைக் கஞ்சான் விழவிழ எழுகின்றவன் விதிக் கஞ்சான் தடைகளைத்தாண்டி முன்னேறுபவன் விழுவதற் கஞ்சான் போர்க்களத்தில் களமாடுபவன் மரணத்திற் கஞ்சான் மூர்க்கன் முரடன் கொலைக் கஞ்சான் பழிக்குப் பழிவாங்குபவன் பழிபாவத்திற் கஞ்சான் குற்றம் இழைப்பவன் களவுக் கஞ்சான் உண்மைகளை மறைப்பவன் நீதிக் கஞ்சான் பாசத்தை புரியான் பெற்றோருக் கஞ்சான் அறிவினை பெறான் குருவுக் கஞ்சான் பண்பினை அறியான் பெரியோர்க் கஞ்சான் நிம்மதியை தொலைப்பான் கடவுளுக் கஞ்சான் சொல்லால் வித்தைகாட்டுபவன் அவைக் கஞ்சான் துணிந்து செயற்படுபவன் வருவதற் கஞ்சான் இழப்புகளை நினையான் வருங்காலத்திற் கஞ்சான் நன்மையே செய்பவன் கொடுப்பதற் கஞ்சான் மனிதத்தை நேசிப்பவன் அர்ப்பணிப்பிற் கஞ்சான் தேடலை தொடர்பவன் பயணத்திற் கஞ்சான் வலிகளையும் வழிகளாக்குபவன் துன்பத்திற் கஞ்சான் போராளியாய் போராடுபவன் தோல்விக் கஞ்சான் சிவன்கழுத்துப் பாம்பு கருடனுக் கஞ்சா தாவுகின்ற குரங்கு விழுவதற் கஞ்சா நீந்துகின்ற மீனும் பேரலைக் கஞ்சா பாலைவனக் கீரி அரவத்துக் கஞ்சா மதிப்பை தூக்கியெறிபவன் மரியாதைக் கஞ்சான் வாழ்க்கையில் நடிப்பவன் மனச்சாட்சிக் கஞ்சான் குடித்து வெறிப்பவன் ஊருக் கஞ்சான் அடிப்பான் கஞ்சா விளைவுகளுக் கஞ்சான் ஜெயம் 03-07-2024