உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பயணம் தொடரட்டுமே..

பயணம் தொடரட்டுமே..

27.06.24 ஆக்கம் 322 பயணம் தொடரட்டுமே நல்லவன் என நா வளர்ப்பவன் வல்லவன் என வாழாதவன் பொல்லாதவன் எனப் பேரெடுப்பவனோ அல்லும் பகலும் தில்லு முள்ளில் சிக்கித் தீயில் கருகுபவன் கள்ளக் குறிச்சியில் குடி கூத்தாடியவன் அள்ளிக் குடித்த மது மயங்கியவன் துள்ளும் உள்ளமதை ஊனமாக்கியவன் சில்லறையில் மலிவு எனச் சீரழித்துக் கல்லறையில் உயிரைச் சீதனமாக்கியவன் பல்லைக் கடித்து வாழ்ந்த மங்கையர் சொல்லைக் கேளாத தொல்லையர் இல்லை என் நல்ல பாதை கண்டு பயணம் தொடரட்டுமே பரிதாப நெஞ்சங்கள் அஞ்சி அஞ்சி வாழ்ந்த அநியாயம் போதும் போதும் என்று ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து