உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அடையாளம்

அடையாளம்

20.06.24 ஆக்கம் 321 அடையாளம் குடிசையில் கஞ்சி குடித்து மகிழ்ந்தோம் தேடிய உற்றாருடன் கூடி வாழ்ந்தோம் நாடிய அமைதியுடன் எழுந்து நின்றோம் ஈவு இரக்கமின்றிய இனப் பிரச்சினை காவு கொள்ள செத்து மடிந்தோம் சோர்வான வேதனை துரத்த உறவு தொலைத்து வீடின்றி நாடின்றி அலைந்தோம் அகதியாய் அந்நிய நாடு புகுந்தோம் திக்கற்றவன் தமிழன் என் அடையாளம் இன்றி ஒடுக்கப்பட்டோம் அரை வாழ்வு அல்ல முழு வாழ்வும் இங்கே என விலாசமின்றிய உயிர் மூச்சு நிற்கும் வரை விற்கப்பட்டோம் தமிழன் என்ற சொல்லிற்குத் தரணி எங்கும் கறுவல் என்ற அகதி முத்திரையே அடையாளம் அடையாளம். ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து