உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" அடையாளம் "

" அடையாளம் "

“ அடையாளம் “ கவிதை....ரஜனி அன்ரன் (B.A) 20.06.2024 இனத்தின் அடையாளம் மொழி மொழி பண்பாடு வரலாறு எமை இனங்காட்டும் அடையாளங்கள் அடையாளச் சின்னங்களை பண்பாட்டு விழுமியங்களை புலம் பெயர்ந்தாலும் கண்போல காத்திடுவோம் ! அநீதியின் ஆதிக்கம் போரின் அனர்த்தம் வாழ்விடத் தொலைப்பு வறுமைக்குள் தவிப்பு தந்தது புலம்பெயர்வினை அடையாளமானது அகதியெனும் முத்திரை தஞ்சம் தந்த தேசத்திற்கு நன்றி ! அன்பு தந்த அன்னை மண்ணை விட்டு அலைகடல் கடந்து அந்நிய தேசம் வந்தாலும் அகதியாகி சகதியெனும் சேற்றுக்குள் மூழ்கினாலும் அடுத்தடுத்து சவால்களை எதிர்கொண்டாலும் அயராத கடின உழைப்பும் விடாமுயற்சியும் அள்ளித் தந்தது நிரந்தர உரிமையை ! அடுத்த சந்ததி அடையாளத்தோடு வாழ எம் மொழியையும் பண்பாட்டையும் வரலாறாய்ப் புகட்டி நிற்போம் ! https://www.youtube.com/watch?v=N97jZTgQh_A