உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அடையாளம்

அடையாளம்

கவி 730 அடையாளம் தமிழர்கள் என்ற அடையாளம் பிறப்பு தமிழால் அடைந்தோமே இத்தனை சிறப்பு தமிழ் குடியில் பிறந்தோம் வளர்ந்தோம் தமிழை தாய்மொழியாகக் கொண்டதால் மகிழ்ந்தோம் பிறதேசம் வந்து வாழ்ந்தாலும் வாழ்வு மறக்கலாகாது தமிழ் இனத்தின் மான்பு தமிழ் அவமானம் அல்ல அடையாளம் தமிழ் எங்களின் பேச்சல்ல மூச்சு ஊரையோ நாட்டையோ விட்டாலும் இன்று பேரும் புகழும் தமிழாலேதான் உண்டு தாய்மொழி நாவிலே இனிமையாய் தவழட்டும் வாய்வழி வாழ்ந்தது வாழ்க்கையை தழுவட்டும் தனித்துவமான பண்பாடுடைய இனம் இது தனித்துவமான மரபின் பாரம்பரியம் இது ஏன் தமிழின் மேன்மை பெரியது நான் யாரென சொல்லும் அறிவது தேனெனும் தமிழை குழந்தைகள் ருசிக்கட்டும் மானென துள்ளியே மகழ்ச்சியாய் புசிக்கட்டும் எங்கு பிறந்தாலும் தமிழ் வளரட்டும் மங்காது தனித்துவம் தலைமுறைக்கும் மிளிரட்டும் ஜெயம் 20-06-2024