உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பிஞ்சினை வருத்தாதே

பிஞ்சினை வருத்தாதே

பிஞ்சினை வருத்தாதே கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் // வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு // தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் // பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே // கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே // பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே // சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ // ஓடும் பாம்பின் விசமது அறியார் // ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் // காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே // சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே // சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் // அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் // வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் // கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே // பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே // சர்வேஸ்வரி சிவருபன்