உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தடமது படைத்தெழும் தனித்துவம்

தடமது படைத்தெழும் தனித்துவம்

06.06.24 ஆக்கம் 319 தடமது படைத்தெழும் தனித்துவம் தடமது படைத்தெழும் தனித்துவம் குடமது நிறைத்துக் கூடிக் குலாவும் ஊடகமது போற்றத் தகுமே 27 ஆவது அகவைத் தொடும் லண்டன் தமிழ் வானொலியே மேலும் வளர இனிதே மலர உரிமைத்துவம் ஊற்று எடுக்குமே பேரும் புகழும் பூத்துச் சிறப்பிக்கும் சிறுவர், இளையோர், முதியோர் நிரப்பும் ஆக்கங்கள் களையின்றி வலம் வந்து பறை சாற்றிடுமே தமிழ் மொழித் தாக உரமிட்டு மனம் நிறைவு ஆக்கித் தலைமை இட்டுத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் அதிபர் நடா மோகன் , வாணி மோகன், சங்கவி வாழ்க வாழ்க வாழ்கவே இத்தனை தூரம் வந்திடினும் இன்னுமின்னும் பல்லாண்டு காலம் பல்கிப் பெருகிப் பலரும் நாடிட வாழ்க வளர்க என வாழ்த்திடுவோமே. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து