உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இலட்சியம் கொள்வாய்

இலட்சியம் கொள்வாய்

இலட்சியம் கொள்வாய் அறிவையும் கூட்டியே அன்பையும் வளர்ப்பாயே அறத்தின் பாதையிலும் ஓங்கிடவும் நிற்பாய் அணியாய் எழுவாய் வளமது சிறக்கவும் அவனியிலே என்றுமே ஒற்றுமையும் சேரவும் பண்போடு பாசமும் பற்றிடவே வேண்டும் பழக்கத்திலே என்னாளும் ஒழுக்கமும் வேண்டும் பாரம்பரியங்களைப் பேணிடவும் வேண்டும் பரிவும் மேலோங்கக் கருணையும் வேண்டும் உண்மையின் பாதையில் உயர்வாய் எழுவாய் ஊழல்கள் இல்லாத சூழல்களை உருவாக்கு உணர்வுடன் என்றுமே விழித்துமே நடப்பாய் உலகிற்கு நல்ல சேவைகளைச் செய்வாய் கண்ணியப் பாதையிலே களங்கம் இல்லையே திண்ணமாக உணர்வாய் திகழும் வாழ்வும் பண்ணிய தர்மமும் உன்னையும் காக்கும் எண்ணியே வாழ்வில் இலட்சியம் கொள்வாய் சர்வேஸ்வரி சிவருபன்