உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தீதும் நன்றும்

தீதும் நன்றும்

அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-29 23-05-2024 தீதும் நன்றும் தீதும் நன்றும் பிறர் தர வாரா எமக்கு நாமே எடுத்தாழ்வது முட்டி மோதும் வாழ்வினில் எட்டி நடப்போம் மனிதாபினத்துடன் நல்லவை அறமும் தீயவை அறமற்றவையும் நியாயமாய் நடப்பதாய் எண்ணி அநியாயம் செய்வதும் பிறர்க்கு உதவுவதாய் நினைத்து உபத்திரவம் செய்வதுவும் விழித்து நாம் அன்னப்பட்சி பிரித்தெடுக்கும் பாலையும் தண்ணீரையும் போல் நல்லதையே பிரித்தெடுப்போம். செருக்கு, அகங்காரம் நீக்கி தீதற்று, நன்றாய் வாழ்ந்திடுவோம். நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.