உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல

முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல

கவி 724 முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல ஆண்டுகள் எத்தனைதான் உருண்டோடி நகரட்டும் மாண்டவர் நினைவுகள் உள்ளம்விட்டு நீங்கிடுமா எமக்காக போராடிய காவிய நாயகர்கள் ஒருபக்கம் அவர்களோடு அருகிருந்து தீக்குளித்தோர் ஒருபக்கம் வைகாசி பதினெட்டை தமிழினந்தான் மறந்திடுமா வையகமே கைவிட்ட கொடுமையைத்தான் மன்னித்திடுமா கடுமையாக போராடி வீழ்ந்திட்ட குலசாமிகளே விடுதலை வீரருமை வரலாறும் சுமந்திடுமே அப்பாவி மக்கள்மேல் பொழிந்ததே குண்டுமழை ஒப்பற்ற உயிர்கள் சூறையாடப்பட்டதே துயரநிலை அவயவங்களை இழந்து துடிதுடித்தோர் எண்ணிலடங்காது அவைகளைக்கண்டு சித்தப்பிரமை பிடித்தோர் சொல்லிமாளாது கதையை முடிக்கவென ஓநாய்கள் துடித்தன அதை வழிநடத்தவென குள்ளநரிகளும் சேர்ந்துகொண்டன பதைபதைத்து என்னசெய்வதென தெரியாது அங்கலாய்த்தவரை சிதைத்தும் குதறியும் செய்ததே சித்திரவதை எம்மினமே இந்நாளில் அஞ்சலிப்பை செய்திடுவோம் நம் தலைமுறைக்கும் வலிகளை கடத்திடுவோம் இது முடிவல்ல இனித்தான் ஆரம்பம் அது குமிறியபடி வெளிவரவிருக்கும் பூகம்பம் ஜெயம் 16-05 2024 https://youtu.be/pOesCZadBPY?si=nybryVpI-OfuXNb-