உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாறாத சுவடுகள்

மாறாத சுவடுகள்

“ மாறாத சுவடுகள் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 16.05.2024 இரத்த வெள்ளத்தில் மூழ்கிய மண் இனத்திற்காகவே ஈகையான பூமி நந்திக்கடலும் செங்கடலான தருணம் பலியாக்கப்பட்ட உறவுகள் வலியினால் துடித்த உயிர்கள் துயரம் சொல்லத் தவிக்கிறது மொழி விழிகளில் வழிகிறது கண்ணீர் முள்ளி வாய்க்காலே ஒரு துயரகாவியம் ! போரின் கொடுமை பசிபட்டினி அழிவுகளும் அநியாய தாக்குதல்களும் ஆறாத காயங்கள் மாறாத சுவடுகள் நீறுபூத்த நெருப்பாக நெஞ்சமதில் இருப்பாக ஆழ்மனதில் புதைந்த ஆறாத்துயரம் ஆழமாய் புதைந்த அத்தியாயம் ! வானம் கூட சோகத்தைப் பொழிய பாட மறந்தன பறவைகளும் பொறுமையை இழந்தாள் பூமித்தாயும் வீரர்களின் தியாகமும் வலிசுமந்த மக்களின் துயரமும் காயப்பட்ட மனங்களும் ரணங்களும் நினைவுகளில் எழுந்த தீராத் துயரம் அத்தனையும் மாறாத சுவடுகளே ! https://www.youtube.com/watch?v=5OOkcO0MAts