உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இரா.விஜயகௌரி. அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ….

இரா.விஜயகௌரி. அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ….

அன்னைக்கு அவள் அன்புக்கு -நிதம் காத்தெழுதும் பரிவுக்கும் பண்புக்கும் தலை கோதி வருடி எழும் நேசமிகு அவள் வாழ்வுக்கும் நிகரேது உலகில் எழுதாத. வேதம் அவள் - வாழ்வை எழுதி வகுத்தெழுதும் -ஞானமும் அவளே அட்சய பாத்திரமாய் நிறைந்தருளும் அசராத அவள் பேரன்பின். பெரும் படைப்பு திட்டமிட்டெழுதி வரும் நூலிழையின் பின்னல் தெளிவாக மனதெழெதும்உறவில் கரைந்தசையும் அவள் தொடுப்பு-நம்மை வழுவாது வார்த்தெழுதும் வார்ப்பில் சிதையாது சீர்தூக்கி சிறப்பாக்பி தினம் செம்மையுறு வாழ்வாக்க வளமாக்க தனையுருக்கி தளராது. விரைந்தெழுதும் அவள் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும் நிகருண்டோ அவனி தனில்………..