உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே

கவி 721 திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே இவர்களின் உலகம் எவர்க்கிங்கு தெரியும் இவர்களின் திறன்கள் யாருக்கிங்கு புரியும் தனித்துவமான மன உணர்வினைக் கொண்டு தனிப்பட்ட திறமையால் மிளிர்கின்றார்கள் இன்று கொண்டாலே ஆர்வம் ஒரு துறையில் கண்டும் விடுவார்கள் கரையினை நிறைவில் இறுகிய மதியும் இழகியே உருவாக்கியது சுருங்கிய மனதும் சிந்தனையை கருவாக்கியது எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்து சொல்வதில் கொஞ்சம் பிடிவாதத்தையும் சேர்த்து ஒன்றையே மறுபடியும் செய்தாலும் அருமை ஒன்றுக்கு மேற்பட்ட திறன்களினால் பெருமை அபாரமான ஞானம் உடையவர்களென்பது உண்மையே விவரமான குழந்தைகளிவர்கள் இவருலகம் மென்மையே ஊக்கங்களோடு ஏக்கங்களின்றி பூத்துவிடும் பூக்கள் தேக்கியே திறன்களை காவிச்செல்லுமே நாட்கள் ஜெயம் 24-04-2024 https://youtu.be/uhVKxmshhhE?si=EFwSvSbBlpMLtKJK