உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வலியதுவோ முதுமை !

வலியதுவோ முதுமை !

வலியதுவோ முதுமை ! கவி...ரஜனி அன்ரன் (B.A) 28.03.2024 வாழ்க்கைப் பயணமதில் இளமைக்காலம் இதமாக இளமைத் துடிப்போடு கடந்துவிட அனுபவங்களின் முதிர்வில் ஆட்டம் இழந்த நிலையில் வெந்துபோன நெருப்பின் தணலாக நொந்து போகுதே இதயங்கள் முதுமையில் வலியதுவே முதுமை ! குழந்தைகளைப் பெற்றவலி சுமந்தவலி குடும்பத்திற்காய் உழைத்த வலியென இளமைக் காலத்தை அசைபோட இடுப்புவலி கால்வலி கைவலியென நோயினைச் சுமந்த வலியாக முதுமைக் காலமதில் தனிமையும் வாட்ட தொடருமே வலிகளும் ! உடலில் உணர்வில் உறவில் மாற்றம் உடலும் தளர உளமும் சோர கடந்து போகுது காலமும் முதுமையை நோக்கி முதுமை வரமா? இல்லை முன்னோர் இட்ட சாபமா? இளமையின் ஆட்டத்திற்கு முதுமை ஓர் பாடமே ! https://www.youtube.com/watch?v=neVumZCUFyo