உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வலியதோ முதுமை

வலியதோ முதுமை

Selvi Nithianandan (608) 28.03.2024 வலியதோ முதுமை காலமும் வேகமாய் நகர ஞாலமும் மாற்றமாய் சேர சோகங்கள் பலதாய் தொடர சோர்ந்திடும் சரீரம் உணர வெளியிலே நடையும் இன்றி வெயிலும் வரவும் குன்றி வீட்டிலே சோர்வாய் தூக்கம் விடிந்தால் எழுவதால் ஏக்கம் மூட்டு முதுகு வலியாய் காலும் வீக்கம் நோவாய் படுக்கை இல்லா விழிப்பாய் பயமும் துரத்த நினைப்பாய் மூப்பு இன்றும் நிலையாம் முனகும் செயலில் தொல்லையாம் தீர்ப்பு அதுவே இல்லையாம் தீர்க்க முடிவே வலியாகுமா?