உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 711 காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் காற்றில் மிதந்து வையகம் சுற்றும் ஒலியே கேட்டுச் சுவைக்க ஓரூடகம் அது வானொலியே இல்லம் நுழைந்தே தனிமையை விரட்டியே துணையாவாய் உள்ளம் கவரும் நிகழ்ச்சிகள் தந்தே உறவாவாய் மொழியின் வாசத்தை உள்ளம் உவந்தே நுகரும் களிக்கும் செவிகள் கேட்பதால் பெருமைகள் அடையும் தேனாக வார்த்தைகளை சிந்திடுவார் தொகுப்பாளர் நேரலையில் காணாததைக் கண்டதென சிந்தையும் சிறைப்படும் காற்றலையில் உணர்வுகளுக்கு ஊட்டச்சத்தளிக்கும் உற்சாகமான நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக தினந்தினம் புதுப்புது பிரசவங்கள் ஒலிகளாகி வெளியாக சிந்தனைத் திறனை பெருக்கிவிடும் விந்தையான பெட்டி வித்தைகள் பலதைச்செய்தே இரசிகரை வைத்திடும் கட்டி தேசம் கடந்தே தேடிவந்து அழகாக கதைபேசும் நேசங்கொண்டவர் கேட்காவிடின் அன்று விடுமுறையெடுக்கும் சந்தோசம் எத்தனையோ ஊடகங்கள் அறிமுகமாகலாம் அவணிக்கு புதிதாக அத்தனையையும் மீறி காற்றலை இன்றும் புதிராக ஜெயம் 15-02-2024 https://youtu.be/M71nGXCd3OY?si=cmNzpgrz40-lmeIh