உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ காற்றின்வழி மொழியாகி வாழ்வு தந்தாய் “.....கவி...ரஜனி அன்ரன் (B.A) 15.02.2024 ஒற்றை மனிதனின் உருவாக்கம் மாற்றான் தேசமதில் காற்றலையாகி காற்றின் வழி மொழியாகி தேம்ஸ்நதிக் காற்றோடு கலந்து தேசமெல்லாம் தமிழ்மணம் பரப்புதே ! காற்றின் மொழியாகி காதோரம் வந்து ஊற்றாகி உறவாகி உறுதுணையுமாகி விழியாகி ஒளியாகி விடியல் தந்தாய் உள்ளம் கவர்ந்தாய் இல்லம் தேடி வந்தாய் வளம் தந்தாய் மொழியாகி வாழ்வும் தந்தாய் கவிக்களமும் தந்தாய் கவி படைக்க ! வானொலி தேன் ஒலியாகி தேசமெல்லாம் ஒலிக்குது தேடலுக்கு வலுச்சேர்த்து பெருக்கியது ஆற்றலை - உன் படைப்புக்களும் தொகுப்புக்களும் ஏராளம் பயன் பெற்றவரும் தாராளம் தொழில் நுட்பத்திலும் அதிவேகம் தொட்டு விட்டாய் இலக்கின் உச்சம் ! மார்க்கோனியின் மகத்தான கண்டுபிடிப்பு ஹார்மோன்களுக்கு எல்லாம் மருந்தாச்சு தனிமையைப் போக்கி தைரியத்தைத் தந்த காற்றின் மொழியே காதலின் சுகமே - நீ ஆற்றும் சேவையோ அளப்பெரிது உனை வாழ்த்திட வார்த்தைகள் இல்லை என்றும் வாழ்க பல்லாண்டு வளமோடு நீ ! https://www.youtube.com/watch?v=0EzaeK-JSco