உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-20 25-01-2024 நிலாவில் உலா தித்தித்த அன்றைய நினைவுகள் தீயாய்ப் படருது மனதினிலே தத்தித் தத்தி நடக்கையிலே தாவி தந்தை கைபிடித்து வருகையிலே ஆயிரம் கேள்விகள் என்னுள் திரும்பித் திரும்பி கணக்கிட்டேன் குழப்பத்தில் நானும் குறுக்கிட்டேன் எத்தனை நிலா எம் ஊரினிலே? தந்தை தந்த பதிலினிலே வட்ட நிலா உன் வதனம் போல் ஒற்றை நிலா உலா வருவதை உற்று நோக்கி நானிருக்க. வருடம் பலவும் உருண்டோட வதனமும் மேலும் வயதேற சந்திரயான் உலா வந்த நிலாபோல கரடு முரடானதுவே வதனமுமே. கவனம் உன்னிலும் நிலை நாட்டு கண்டதையெல்லாம் தலையில் இடாதே வலிகள் வரலாம், வாய்விட்டு பேசு கை கோர்த்து உலா வா நிலவினிலே. நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.