உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 708 அமைதி அமைதியான வாழ்வில் மகிழ்ச்சியுறாதோ உள்ளம் அமைந்திடும் நாட்களால் இன்பமுறாதோ இல்லம் துன்பங்களும் துயரங்களும் வந்துவிட்டு போகட்டும் மண்கொண்ட வாழ்வில் நிம்மதியும் சூழட்டும் புறச்சூழல் அமைதியை ஆக்கிரமிக்க வரும் மறத்தலும் மன்னித்தலும் நிம்மதியை தரும் புத்தரும் இயேசுவும் அமைதியாலே சாதித்தவர்கள் தத்துவத்தை தரணியில் அதன்மூலம் போதித்தவர்கள் சிந்தையை அடக்குவது சிரமமான காரியமோ வந்ததுகொண்ட சோகங்களும் அணைதனை மீறியதோ புதிரான வாழ்க்கையிலே தினமொரு போராட்டமோ எதிர் நீச்சல் போட்டபடி வாழ்வாட்டமோ தாழ்வும் உயர்வும் துக்கமும் மகிழ்ச்சியும் வாழ்வில் அமைந்துகொள்ளும் இப்படியான நிகழ்ச்சியும் எதிர்மறை உணர்வுகளால் உண்டாகும் மனத்தளர்ச்சி இதிலிருந்து தப்பாவிட்டால் ஏதிங்கு மனவளர்ச்சி தீர்க்க முடியாதவையும் அமைதியாலே தீர்ந்துவிடும் வார்த்தைகள் ஆயிரத்தை மவுனம் கோர்த்துவிடும் அசைபோடுவதால் சோகத்தை என்னதான் இலாபம் இரசித்துவிட வாழ்க்கையினை நெருங்கிடுமோ பாவம் அழுத்தங்களை போக்கிவிடும் அருமையான மருந்து பொழுதுகளும் படைத்துவிடும் சந்தோச விருந்து சங்கடங்கள் எங்கே பிரச்சினைகள் எங்கே தங்கிவிட அமைதி மங்கிவிடும் இங்கே ஜெயம் 24-01-2024 https://youtu.be/X1h9R34V0q8?si=MnSZg2wRN0heThYP