உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 703 கடந்துவந்த பாதையிலே ஆயிரத்தைத் தாண்டிய ஒரு அற்புத பயணம் திரும்பிப் பார்க்கின்றேன் விருப்பம் தீர்க்கின்றேன் நானாகவா பயணித்தேன் வானாக உயர்த்தினார்கள் உற்சாக வார்த்தைகள் ஊட்டமுள்ள பார்வைகள் தளம் கிடைத்தது வளம் படைத்தது தயக்கங்கள் உடைந்தன இமயமாய் படைத்தன பங்களித்தார் கணங்களை தங்கமாக்கினார் தினங்களை ஊக்குவித்த பாராட்டுக்கள் ஆக்கிவிட்ட வாழ்த்துகள் புதுப்புது அனுபவங்கள் புதுமையான பிரசவங்கள் எண்ணிப்பார்த்தால் அதிசயமே என்றும்காணா புதுசுகமே இதமான கவியாய்வு இருதயத்தை கவ்விடும் உயிருள்ள உரையாடல் உணர்வுடன் ஒட்டிவிடும் திரும்பிப் பார்க்கிறேன் திருப்தியை உளம்சேர்க்கின்றேன் வியாழன்கள் வந்தன வியாகுலங்கள் மறைந்தன அள்ளி சுவைக்கவே சொல்லிலூறும் அமுதம் தவித்த செவிகளும் தவிர்க்காமல் புசிக்கும் எத்தனை வருடங்கள் அத்தனையும் மகுடங்கள் கவிஞர்களின் எண்ணங்கள் கவிதையான வண்ணங்கள் அர்ப்பணித்தார் நேரத்தை இப்பயண தூரத்தை கரைந்த காலங்களாலேயே கவிஞரெனும் கோலங்கள் நகர்ந்த பயணம் பகிர்ந்தது பயணும் நிஜமான மகிழ்ச்சி நிழலுக்கும் நிகழும் கடலளவு நன்றிசொல்லவது கடமையிலும் கடமை போற்றப்படும் ஞானியே ஏற்றியதந்த ஏணியே ஜெயம் 21-12-2023 https://youtu.be/5jkWiYqmtd4?si=UADmB6H6JSZKXXft