உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

கடந்து வந்த பாதையிலே......கவி...ரஜனி அன்ரன் (B.A) 21.12.2023 பாதைகளும் பயணங்களும் படிப்பினையைத் தந்துவிட கடந்து வந்த பாதைகளோ கதைகள் பல கூறி நிற்க வாழ்வினையே செப்பனிட்டு வரலாற்றைப் புடமிட்டு வெற்றிப் பாதைக்கும் வழி வகுத்திடுமே ! இலக்கினை நோக்கிய இலட்சியப் பயணமாய் கடந்து வந்த பாதைகள் புடம் போட்டுக் காட்டுதே விரியாத பக்கங்களை விரைந்துமே புரட்டிவிட தெரியாத பாதையிலே புரியாத பயணமே வாழ்க்கை ! ௧டந்து வந்த பாதைகளில் கல்லுகளும் முள்ளுகளும் இடர்களுமோ ஏராளம் தடைகளைத் தாண்டியே பாதைகளில் பயணிக்க திருப்பங்களும் திருத்தங்களும் திருத்தி விடுமே வாழ்வுதனை ! https://www.youtube.com/watch?v=PC-xnZOpB_A