உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 668 வாழ்க்கை யார் வாழ்க்கை யார் வாழ்க்கையார் அவர் வாத்தியார் கற்றுத்தருவதில் இங்கு அவரைவிட யார் படித்த பாடங்கள் ஆயிரமாயிரமாய் முடிவில்லை படித்தவற்றால் சோதனையில் சித்திபெற முடியவில்லை முடிவு எப்போதென தெரியாத உலகில் முடியாத பிரச்சினையாய் நாளாந்த வழக்கில் சோதிப்பதற்கென்றே இந்த வாழ்க்கை இருக்கின்றது பாதிப்பின் பின்னரே சாதிப்பு பிறக்கின்றது இயன்றவரை முயன்றும் முடியாமை அனுபவங்கள் யுக்திகளும் செயல்களுக்குள் செயல்படாத தருணங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் சிரமங்கள் அவஸ்தைகள் வெற்றியை அடைவதற்கான படிகளான நிலமைகள் கசப்பும் இனிப்பும் காயங்களும் ஆறுதலும் நிசமா நிழலா நியாயங்கள் மாறுதலும் அமைதியை கெடுத்தும் கொடுத்தும் விளையாட்டு சுமையென்றும் சுகமென்றும் இடைவேளை தான்விட்டு ஜெயம் 02-11-2023 https://youtu.be/KFas7bJgSDU?si=onyVCXMnQF7pGCyv