உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ கார்த்திகையாள் வரவு “ கவி...ரஜனி அன்ரன் (B.A) 02.11.2023 கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் கலகலவென விழித்து விட்டாள் மழை வெயில் குளிரென மத்தாப்பைத் தாங்கி நின்று முத்தாப்பாய் வந்து விட்டாள் ! காலநிலையும் எழிலூட்ட காற்றலைகள் மோதிவர கார்காலம் மழை பொழிய கணகணப்பும் கூடிவர கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் ! மழைச் சாரல் அடித்துவிட மரக்கிளைகள் இலை உதிர்க்க மஞ்சள் வர்ண இலைகளும் தான் மண்ணினை அலங்கரிக்க மலரினமும் மயங்கிவிழ மலர்ந்து விட்டாள் கார்த்திகையாள் ! கார்த்திகை மைந்தர்களை கல்லறைக் காவியரைத் துயிலெழுப்ப காந்தள் கொண்டு வந்துவிட்டாள் காரிகையாம் கார்த்திகையாள் கனதியான நினைவுகளும் காட்சியாகுதே ! https://www.youtube.com/watch?v=9L10XM8h_Gs