உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.10.23 கவி இலக்கம் -287 எங்குதான் போய்முடியுமோ சின்னதாய்க் கோள் மூண்டு பென்னம் பெரிதாய்க் கன்னம் விட்டு சீண்டிடும் நாடகக் குழுவுக்கு என்னதான் வேண்டும் ? வல்லரசு நாடுகளின் சதியான வலைப் பின்னலின் சதியே நிலைப்பாடில்லாத அரசியலின் தந்திரமதில் பலிக்கடாக்கள் மாந்தரே கொலைக் கூட்டத் தலைகள் நடாத்தும் போராட்டமே சில நாடு தொடங்கி பல நாடு சேர்ந்த அகோரப் பசியின் இரத்த வெறித் தாண்டவமே பேசுவதோ சூழல் மாசு பிறக்கும் சந்ததியோ தூசு நாசூக்காய்க் கொடுப்பது வேறு மூசி மூசி உழைத்த காசெல்லாம் குண்டு குண்டாய் ஒரு நொடியில் பறந்து பறந்து சிதறுது ரொக்கட்டில் .