உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ சுற்றுலா “....கவி...ரஜனி அன்ரன் (B.A) 28.09.2023 சுற்றுலா என்றாலே மகிழ்வு மகிழ்ச்சியின் பெருஉலா சுற்றுலா சுற்றுகின்ற பூமிதனில் - நாமும் சுற்றி வருகிறோம் உலாவாக வளரும் நாடுகளுக்கு பலமாக வளர்முக நாடுகளுக்கு உரமாக பொருளாதாரத்தின் மூலமாக வருவாயை அள்ளிக் கொட்டுதே சுற்றுலா ! சுற்றுலாவைப் பேண ஐ.நா.மன்றும் அமைத்துத் தந்ததே செப்டம்பர் 27ம் நாளை அகில உலக சுற்றுலாத் தினமாக அயராத உழைப்பில் அயர்வு சோர்வு நீங்க இயந்திர வாழ்விற்கு விடுப்புக் கொடுக்க குடும்ப வாழ்வில் ஒற்றுமை ஓங்க குழந்தைகள் மனதில் குதூகலம் மலர குடும்பமாய் சென்று வருதலே சுற்றுலா ! வாழ்வியல் பயணங்கள் வண்ணமாகி வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்திடுமே பண்பாட்டு விழுமியங்களை கலை ரசனைகளை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து சுற்றுலாவை மகிழ்வாக்குவோம் புத்துணர்வு கொடுக்கும் அருமருந்து சுற்றுலாவே ! https://www.youtube.com/watch?v=MMqFqMD2y3c