உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 663 தன்னை அறிந்தவன் வாழ்க்கைப் பயணம் செல்கின்றது அழகாக நாளும் புதுப்புது அனுபவம் தெளிவாக வேகத்தடைகள் போடவென சில நிகழும் கடுமையைக் கடந்துவிட மகிழ்ச்சியில் முற்றும் போனதும் வந்ததும் இனி வரப்போவதும் இன்பதுன்பத்தை இரண்டறக் கலந்தே தரும் இருப்பினும் பூ வாசமாகவே பூக்கின்றது புரிதலால் புதிதான மதிப்பான வாழ்க்கை எவ்வாறு பேசுவதென காலந்தாழ்த்தியே கற்றது மெளனம் நிறைய சந்தர்ப்பங்களில் பாதுகாத்தது சூழ்நிலையை மாற்றப்போய் பட்டதெல்லாம் அவமானம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவதென முடிவு அனுபவம் ஒருவரை எப்படியும் மாற்றிவிடும் சரிந்து விழாமல் வாழவும் தெரிந்தது வந்து சேர்வதெல்லாம் வந்தே சேரும் விரும்பிய வாழ்க்கையை தேடியே நகர்வு பிடிக்காத மனிதர்கள் பலரைச் சந்திப்பு பிடித்த மனிதர்களுடன் பிடிப்போடு பேச்சு தன்னையே தான் அறிந்த ஓர்நிலை சிக்கத்தான் வைத்திடுமா துன்ப வலை ஜெயம் 14-09-2023