உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

எழுத்தறிவு இல்லையெனில்.....கவி...ரஜனி அன்ரன் (B.A) 07.09.2023 மொழிக்கு மூலாதாரம் எழுத்தே எழுத்தே மொழிக்கு அணிகலன் சமூகத்தின் ஆணி வேரே எழுத்தறிவு மொழி பேசும் இனம் அழியாமல் இருக்க எழுத்தறிவே அவசியம் எழுத்தறிவு இல்லையெனில் மொழியே அழிந்து விடும் ! பட்டறிவு பகுத்தறிவு பக்குவம் இருந்தாலும் அறிவினைப் பெருக்க ஆற்றலை வளர்க்க இலக்கினை அடைய இமயமாய் உயர தகுதியைப் பெற தராதரத்தோடு வாழ வேண்டும் எழுத்தறிவு ! எந்த மொழி என்றாலும் எழுத வாசிக்க புரிந்துகொள்ள தெரியாத நிலையே எழுத்தறிவின்மை வறுமை போர்ச்சூழல் அரசியல் நெருக்கடிகளால் தலைவிரித்தாடுகிறது எழுத்தறிவின்மை ! இணையவழி முன்னேற்றம் கணணிப் பயன்பாடு உலகமயமாக்கல் தொழில்நுட்ப அபாரமென நிறைவான காலகட்டத்தில் எழுத்தறிவின்மையென்பது வெட்கப்பட வேண்டிய விடயமே ! https://www.youtube.com/watch?v=j3tueZjUMdk