உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ வேலாயுதம் ஐயா “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 31.08.2023 எழிலான காரைநகரில் பிறந்து ஒயிலான ஒல்லாந்து நாட்டினில் வசித்து ஐக்கியராச்சியத்தில் ஐக்கியமாகி ஐரோப்பிய வலச் செய்திகளோடு இருபத்தியாறு வருடங்கள் பயணித்து அதிரடியாக ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற வேலாயுதம் ஐயாவிற்கு எமது அஞ்சலிகள் ! பத்திரிகை நிருபராய் நாடக நடிகனாய் திரைப்பட நடிகனாய் தயாரிப்பாளனாய் செய்தியாளனாய் பல்துறைக் கலைஞனாய் வாழ்ந்து புலம் பெயர்ந்து வந்த போதும் கலைத் தாகத்தோடு செயற்பட்ட கலைஞனாம் வேலாயுதம் ஐயாவை காலனும் அழைத்தானே கடுகதியில் ! அன்றில் இருந்து இன்றுவரை ஒல்லாந்து செய்திகளோடு தொடங்கிய பயணம் ஐரோப்பிய செய்திகளாக பரந்து விரிந்து இறுதி மூச்சு வரை உறுதியோடு செயற்பட்டு தீராக் காதலோடு ரி ஆர் ரியை நேசித்து காதோரம் ஒலித்த குரல் காற்றோடு கலந்ததுவே ! https://www.youtube.com/watch?v=ukCp9godJvw