உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.08.23 கவி இலக்கம்-279 குறிக்கோள் அலையோடு பிறவாத கடலில்லை உலையோடு கொதியாத சாதமில்லை உடலோடு தொடராத நிழலில்லை குறிக்கோள் இல்லாத வாழ்வு கூனிக்குறுகி வெடித்துச் சிதறி சீரழிந்து விடுமே அறிவுக்கேற்ப புத்திசாலித்தனம் மூளையிலிருந்து பறித்தெடு செறிந்த வாசம் மலர்ந்திடுமே சென்று சேருமிடம் வரையறு பயணம் தொடர்ந்து நடைபோடுமே என் கடமை என்னவென்று புரிந்திடு தன்னாலே உடைமை,உரிமை வந்திடுமே தீயதை விட்டு நல்லது செய்ய அதர்மம் நீங்கி தர்மம் ஓங்க நன்னெறி நாட்ட வெற்றி பெற்றிடுமே நம் நாட்டுக்கு என்ன தேவை சிந்தித்து சிறகை விரித்திட எம்மால் முடிந்தது செய்து மனம் நிறைத்திடுவோமே .