உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ ஆளுமையொன்று சரிந்தது “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 10.08.2023 ஒலிபரப்புத் துறையின் ஆளுமையாளனை கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரனை கணீரெனும் செய்தி வாசிப்பாளனை கலையோடு வாழ்ந்த கலைஞனை தமிழோசையின் மூச்சானவனை சட்டம் பயின்ற சட்ட வல்லுனனை சடுதியாய் கவர்ந்தானே காலனும் விரைந்து ! இலங்கை வானொலியில் தொடங்கிய பயணம் இங்கிலாந்தில் தமிழோசை வரை தொடர்ந்து கலை இலக்கியம் நாடகம் ஊடகமென வளர்ந்து தமிழோசைக்கு உயிர் நாதமாகி பல்துறைக் கலைஞனாய் பண்பாளனாய் இருந்த கலைத்தாயின் தலைமகனை காவு கொண்டதே கொடிய விபத்தும் ! ஊடகத்தை வெளிச்சமாக்கி தமிழோசைக்கு உயிர்கொடுத்த ஆளுமையொன்று சரிந்தது ஒலி அலையொன்று ஓய்ந்தது உண்மைக் குரலொன்று மெளனித்ததே மின்னல் வேகத்தில் வந்த மின்ரயிலினாலே ! https://www.youtube.com/watch?v=mrDvXDc5Hnw