உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.07.23 கவி இலக்கம்- 277 வாழ்வெனும் ஓடம் ஒரு முறை ஏறும் ஓடமிது பலமுறை தேறும் பாடமது நாளும் பொழுதும் படிக்கும் வேடமிது ஆணும் பெண்ணும் கலந்த நாடகமிது வேணும் வேணும் என்றிருப்பின் கல்லையும் கரைய வைக்கும் புல்லையும் பூவாக்கும் பொறுமை நறுமணமாகும் சிறுமை அறவே மறக்க முழுமை நிறைவே சிறக்கும் இன்ப துன்பம் தேடி வரும் இரவு பகல் போலவே இடியும் மழையும் நாடி வரும் நோய் நொடியும் சேரவே இறப்பும் பிறப்பும் தேடி வரும் உழைப்பில் முயற்சி மனமோ மகிழ்ச்சி குட்டிச் செல்வங்கள் குடும்பமுடன் குதூகலமாய் வாழ்வு இன்பமுடன் ஓடத்தில் விரைந்திடுமே