உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

கவிதை நேரம்-13.07.2023 கவி இலக்கம்-1722 ஏற்றம்-இறக்கம் --------------------- ஏற்றம் காணின் இறங்க கூடாது இறங்கிய பின் சோரக் கூடாது ஏலுமளவு படியேறி உயரவே துணிந்து செயல்படு மனமே தோற்றவர் முயன்று போராடு முயற்சி பயிற்சியின் ஏற்றமே வீழ்ந்து கண்டு முன்னின்று போராடு முடங்கி மூலையில் ஒதுங்கல் ஆகுமோ நேற்றைய நினைவுகள் நிலை குலையா நாளைய நினைவுகள் முடங்கி விடா இன்றைய நினைவுகள் ஏற்றம் கண்டிட நம்பிக்கை மனதில் அனுபவமாக ஏறிப் படிகளில் கால்கள் பதியவே நெஞ்சம் நிறைந்து வாழ ஏற்றம் வரும் நாமே முயற்சியில் முயன்று தேடின் நாளையும் நமக்கே ஏற்றம் கண்டு மலரும்