உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ வரப்புயர “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 06.07.2023 பொருளாதாரமெனும் வரப்பு உயர உயர வளங்களும் பெருகப் பெருக வாழ்வும் சிறக்கும் வனப்பும் பெருகும் தாழ்நிலை அகலும் தளர்நிலை மறையும் ஏழ்மை விலகும் ஏற்றங்கள் பெருகும் வரப்புயர வாழ்வோம் வளமோடு ! பூச்சியத்தில் இருந்து தொடங்கிய வாழ்வு இராச்சியத்தை அடையக் காட்டியது வழி கல்வியில் கலையில் வைத்தது உயர்த்தி வாழ்வியல் பாதையில் தந்தது உயர்ச்சி பேதமின்றியே தந்தது சலுகை வேத வாக்காய் கொண்டோம் நாமும் முதன்மையாக இருந்த வாழும்நாடு - இப்போ முடக்க நிலையில் மந்தகதியில் பொருளாதாரம் ! உக்ரைன் போரும் எரிவாயுத் தடையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீடுகளும் முடக்கியது நாட்டின் பொருளாதாரத்தை விலைவாசி உயர்வும் பணவீக்கமும் தலைவிரித்தாட உற்பத்திகள் குறைய சந்தைப்படுத்தல் சரிய வாழ்வாதாரம் பாதிக்க சரிந்தது பொருளாதாரம் வரப்புயர வாழ வாழ்வாதாரம் சிறக்க பொருளாதாரம் எனும் வரப்பு காணவேண்டுமே ஏற்றம் ! https://www.youtube.com/watch?v=qi0e26iysGs