உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி

வரம் பெற்ற அகதிகள்…….. திசைகளெல்லாம் சிதறி நின்று அகதிகளாய் முத்திரைக்குள் -தின அவலங்களின். பின்னலிலே அலட்சியத்தின். விதைகளாய் நாம் குடும்பங்கள் குலைந்தன -நம் மொழிமறந்து. மலைத்து நின்றோம் விட்டெறிந்த. கற்களாய். நாம் அடித்தளத்தை. தொலைத்து. நின்றோம் உழைத்தோம் களைத்தோம் மலைத்தோம் நிலைத்தோம் என்றால் நிலையில்லை சளைத்தவர் நாமா. என்றலைந்தோம் சகதிக்குள்ளும் பொன் நிறைத்தோம் உயிர்ப்பினை கெடுத்து உயிர்நிலைத்தோம் உறவின் நெருக்க வலுவிழந்தோம்-போலி திரைக்குள் நாடக வாழ்வமைத்தோம் சிறகுகள் விரிக்க குஞ்சிழந்தோம் வரமும் சாபமும் நமக்குள்ளே வலுவை. இழந்தவர் வாழ்விழந்தோம் இழப்புத் நிலைப்பும். சீர்தூக்கின் வரத்துள் தொலைந்த அகதிகள். நாம்