உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 659 வாழ்க்கையே எனை கைவிட்டுவிடாதே இந்த ஒருமுறை வாழ்க்கையும் போதும் சிந்தை சலிக்காது மகிழ்ச்சியை ஓதும் வாழ்நாள் இன்னமும் வேண்டும் நிறவாக ஏழ்மைக்குள்ளும் சுகங்கள் இருக்குமே மறைவாக தினமும் படித்திடும் புதிய பாடங்கள் கணக்கிலே இல்லை போடுகின்ற வேடங்கள் வேலை  வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றது நாளை நிறைவாக்கி வெறுமையினை தடுக்கின்றது நீளம் எவ்வளவு சரியாகத் தெரியவில்லை காலம் மறைப்பினும் உவகையே எல்லை கடினமாக வரும்போதெல்லாம் வலிமை பிறந்தது அடித்தபின் அரவணைக்கும் வாழ்ககை சிறந்தது உன்னதமான வாய்ப்பு பூலோகத்தில் ஒருதரம் என்னதான் நிகழினும் அது பெருவரம் தள்ளிவிட்டே  சிலவேளை வேடிக்கை பார்த்தது சொல்லி தவறினை அனுபவம் சேர்த்தது நேற்றை பற்றி இல்லையொரு மயக்கம் காற்றை வணங்குகின்றேன் தொடர்கின்றது இயக்கம் முயற்ச்சி பட்டுப்போகாது  முளைக்கும் எந்நாளும் செயலை வேகமாக்கி நம்பிக்கையதும் நீளும் கனவுகள் பலிக்கலாம் பலிக்காதும் விடலாம் மனதின் ஆசைகள் வற்றாத கடலாம் கடமை என்பதை உயிரெனக் கொண்டேன் உடமை உறவென உள்ளூரக் கண்டேன் புதிராக சிலநேரம் புரியாமல் இருக்கும் எதிர்கால விருட்சத்தின் வேர்களைப் பெருக்கும் ஆரோக்கியம் ஒன்றையே இதுவரை வேண்டுகின்றேன் பாரோடு நட்போடு தீயவைகளைத் தாண்டுகின்றேன் நல்லதெது கெட்டதெதுவென பட்டே கற்றுக்கொண்டேன் உள்ளத்து துன்பங்கள் விலகுவதையும் கண்டேன் விதிப்படி வந்திங்கு வாழ்ந்ததில் சந்தோசம் மதிமீறும் தோல்விகளும் வெற்றிதனை பேசும் நன்றிதனைக் கூறிவிட தேடுகின்றேன் ஆண்டவரை என்றுமிந்த கூரையை தாங்கிநிற்கும் நடுச்சுவரை ஜெயம் 25-06-2023