உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 658 அகதி துப்பாக்கி அரக்கர்களால்  துரத்தப்பட்ட நிலை துர்பாக்கியம் அடைந்தவர்களில் ஒருவனாக தூரதேசத்தில் உயிரைவிட்டு உடல் மட்டுமே புலம்பெயர்ந்தது வெள்ளையர் நடுவில் அகதிக் கோலமானது அகதியெனும் புதிய பட்டம் ஒட்டிக்கொண்டது அன்னிய தேசம் அன்னியனான உணர்வு வந்த மண்ணின் கலாசாரம் தலைகீழெனினும் சொந்த மண்ணைப்போல மனிதம் மரணிக்கவில்லை இருப்பு நிரந்தரமாகி வசதிகள் வரவாகின இருந்தாலும் தவிப்பும் வாழ்க்கையுடன் ஒட்டியது ஊரில் சொந்தங்களின் மத்தியிலில்லா வாழ்க்கை நான், எனக்குப்பின் என்னுடைய பரம்பரை மொழியையைம் மதத்தையும் உள்வாங்குமா எதிர்காலம் இரத்த உறவுகள் அருகமையாத இடைவெளி அகதியாகி செய்த வம்சத்திற்கான துரோகமிது என்னடையாளம் அகதி ஜெயம் ஒல்லாந்து நன்றி ஜெயம் 21-06-2023 https://youtu.be/caw4fybZVfo