உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ காற்றோடு எம்வாழ்வு “....கவி...ரஜனி அன்ரன் (B.A) 15.06.2023 மனித இயக்கத்தின் மூலாதாரம் வாயுக்களின் இயக்கம் காற்று காற்றோடு கலந்தது எம்மூச்சு காற்றின்றி ஒருநொடி கூட வாழ்வில்லை காற்றின் அவசியம் கருதி காற்றலை ஆணையம் யூன் 15ம் நாளை உலக காற்றலை தினமாக்கியதே ! சுற்றுகின்ற பூமி தனைச் சுற்றிச் சுற்றி வருகிறது காற்று தென்றலாய் வருடி தெம்மாங்கு பாடி வாடையாய் வீசி கொண்டலாய் சுழன்று மூச்சோடு நாம் வாழ முனைப்போடு செயற்பட ஊற்றாகி நிற்கிறதே காற்று உயிர்வாழ வளியின்றி வேறு வழிதான் ஏது ? மெல்ல வருடினால் தென்றல் புயலாய் வீசினால் அரக்கி சூறாவளியாய் சுழன்றடித்தால் ராட்சசி சுவாசமாய் நின்று நேசமாய் உறவாடி தேசமெல்லாம் சுற்றி வாசம் வீசிடும் காற்றே நீயே எம் உயிர்மூச்சு நீயே எம் வாழ்வு நீயின்றி நாமில்லை நீயின்றி எதுவுமில்லையே எம் வாசல் தேடிவரும் காற்றே வாழ்வின் உயிர் நீதானே ! https://www.youtube.com/watch?v=isIZ8DbBUHs