உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் -

கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் -

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே மொழிகளின் மூலமாய் மௌனம் கலைத்தாய்/ விழிதிறந் தெம்மை விஞ்ஞா னத்தினை/ பயில வைத்த அழகிய பெண்ணே/ உயிரெனத் தோன்றி உலகினைக் காட்டி/ காசினி மேலே கருத்தை விதைத்தே/ ஆசின் றியவள் அருந்தமிழ்த் தாயே/ எழுத்தின் வரிஒலி இயங்கியல் காட்டி/ முழுதும் முக்கால மும்தான் அழியா/ நிலையை நித்தமும் நிறுத்தி பாரிலே/ அலையே அடித்தாலும் அடங்கா வீரம்/ வரப்பெற் றோமே வரமாய் உன்னால்/ அரம்போல் கூர்மை அறிஞர் பெறவுமே/ பூப்போல் பூத்த புதுமைத் தாயே/ தீப்போல் எழுந்து தீப்பற வையாய்/ பறந்து பறந்து பறந்தெங் கும்தான்/ சிறந்து சிறந்து சித்திரம் போலாய்/ கடலெனக் கொடுத்துக் கஞ்சம் இன்றியே/ உடமை பலதும் உடையாள் நீயே/ ஐம்பெரும் காப்பியமும் ஐந்திலக் கணமும் / அம்மெனத் தந்தாய் அடங்கா கடலாய்/ ஆர்ப்பரிக் கின்ற அற்புதப் பனுவலின்/ வேராய்த் திகழும் வேங்கை நீயே/ தருவாய் நிமிர்ந்து தமிழால் தமிழை/ உருவாய் வளர்த்த உலகின் தெய்வமே/ -கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் - இலங்கை.