உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

Kavi 654 பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் அழிந்தாலும் எழுந்தது மீண்டும் அறிவாலயம் பொசுக்கினாலும் பொலிவுடன் மீளமைந்தது பொக்கிஷம் பூப்பறித்திட பூக்களை பூத்தது பூஞ்சோலை தலைமுறையின் எதிர்காலம் தரணியில் தலைநிமிர்ந்தது செய்தது கொடுமை உலகமே அறியும் சர்வாதிகாரத்தின் முகத்தையும் முழுமைமாய் தெரியும் ஆண்டான் அடிமை ஆட்சியின் வெளிப்பாடு மண்ணெண்ணை தண்ணீர் என்கின்ற உறவோடு மகத்துவமான அறிவாளிகளின் படைப்புகள் தீயோடு தீயிட்ட பரம்பரையோ திரியுது தினாவெட்டோடு சிறுக சிறுக சேமித்தவைகள் சின்னாபின்னமானாலும் பழிவாங்கியோரையும் பார் பாரென மீளமைந்தது இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடமென்ன அடுத்தடுத்து எடுக்கப்போகும் வேடங்கள் என்ன கல்லுக்கு கல்லெனும் நிலையதை மாற்றுவோம் கல்லையும் கரைத்துமே காரியம் சாதிப்போம் ஜெயம் 25-05-2023 https://youtu.be/Ks9eBuIrUXU