உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 653 வலி அறிந்த நாட்கள் மண்ணிலே மனிதம் மரணித்த நாட்கள் மடிப்பிச்சை கேட்டது உயிர்காக்கவே மானுடம் கண்ணிற்கு எட்டிய  தூரமெங்கும் பிணமலை கொடுமை தலையெடுத்து உயிர்களைப் பறித்தது எண்ணில்லா தேகங்கள் மண்ணில் சரிந்தன ஏனென்று கேட்பாரற்ற இனமாக கைவிடப்பட்டது அன்று வேடிக்கை பார்துநின்ற கூட்டமது அரசியல் இலாபத்திற்காக இன்று கூத்தாடுகின்றது அண்ணன் தம்பியென அவர்களை நினைத்திருந்தோம் ஆனால் அன்னியராக்கி தாமரையிலை நீராகினார் மண்ணை மீட்கவென பயிற்சிகள் தந்தவர்கள் மேடையைப்போல் வாழ்க்கையில் நடித்துக் கொண்டனரே கண்டதெல்லாம் கனவல்ல கண்முன்னே நிகழ்ந்தவை கங்கை நதி போல இரத்தாறு இன்னும் ஈழவர் நம்பித்தான் கெடுவாரோ இதுதான் படிப்பினை என தெளிவாரோ பட்ட அனுபவம் ஈழவர் எம்மோடு பயணத்தை மாற்றி அமைப்போம் இன்றோடு திட்டமிட்டே நடாத்தப்பட்ட படுகொலைகள் மறப்போமா திறப்போமே புதிய கதவுகளை இனியேனும் கட்டிக்கொண்ட கொள்கை கோபுரமாக எழட்டும் கடைசியிலே கண்டவைகள் பாடமாக அமையட்டும் எட்டுத்திசையின் ஈழவரும் சொந்தமாய் ஒன்றினைவோம் ஏமாறாது எவரிடமும் நாமாக துணிவோம் ஜெயம் 17-05-2023