உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-10 11-05-2023 வெறுமை போக்கும் பசுமை பசுமையில் காண்போம் குளிர்ச்சி மனங்களில் அகலும் வறட்சி மரங்களை நட்டால் எழில்ச்சி வேண்டாம் இனியும் எம் இனத் தளர்ச்சி காடு களனிகளை இழந்து நாடுகளற்றவர்களாய் அலைந்து ஓட குண்டுமழைகளும் பொழிய முற்சியற்றவர்களாய் வாழ பூக்களும் காய்களுமாய் தொலைய பசுமை இழந்த வெறுமைக் கோலம் வேண்டாம் இனியும். பச்சை மரங்களை நாட்டி இச்சைக்கேற்றவற்றைத் தேடி அற்றவர்க்கு ஈந்து கொடுக்க மற்றயவை போக்கும் வெறுமை. மனங்களில் கனங்கள் இறங்கி வனங்களில் பழங்கள் ஏறி எம் இனங்கண்டு சேர்ந்து வாழ்ந்து இன்பமாய் வாழ்வோம் என்றுமே.. நன்றி ஜெபா ஸ்ரீதெய்வீகன்.